பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நீங்காத நினைவுகள்

நல்லப்பரெட்டியார் அப்போது அங்கிருந்த பெரியவர்களில் சிலர் இந்த ஏற்பாடுகள் செய்த K.N. நல்லப்பு ரெட்டியாருக்கும் அவர் காலகதி அடையும்போது அவர் திருமேனியை வலப்பக்கமாக அடக்கம் செய்தால் பொருத்தமாயிருக்கும் என்று சொன்னது நினைவிற்கு வருகின்றது

நினைவு - 14 : 1955-பங்குனி மாதத்தில் செட்டிகுளத் திருத்தலப் பயணம் மேற்கொள்ளப் பெற்றது. இப்போது என் அன்னையார் காரைக்குடிக்கு வந்துவிட்டார்கள். என் அன்னையார் செட்டிகுளக் குமரனுக்கு நேர்ந்து கொண்ட கடனைத் தீர்ப்பதற்காகவும், இளைய மகன் இராமகிருட்டிணனுக்கு முடிஇறக்குவதற்காகவும் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இப்பயணம் வெற்றியுடன் நிறைவு பெறுவதற்கு K.N. நல்லப்ப ரெட்டியார் பெருந்துணை புரிந்தார். இவர் துணையின்றேல் செட்டிக்குளம் நிகழ்ச்சி வெற்றியுடன் நடைபெற்றிருக்க முடியாது. இரண்டு மூட்டை நெல்லை வேகவைத்து புழுங்கல் அரிசி தயார் செய்யவும், அதற்கு வேண்டிய மளிகை சாமான்கள் சேகரிக்கவும், பாத்திரங்கள் வாழை இலைக்கட்டு இவற்றை வண்டியில் கொணர்வதற்கும் ஒரு வாரத்திற்குமுள்ளதாகவே என் அன்னையாரைக் கோட்டாத்துருக்கு அனுப்பி வைத்தேன். இவற்றிற்கெல்லாம் நல்லப்பரெட்டியார் முன்நின்று உதவினார்கள். ஒருகுறிப்பிட்ட நாளில் சாம்ான்கள் விறகுக்கட்டு, சமையல் ஆட்களுடன் செட்டிக்குளம் மலைக்கருகிலுள்ள ஒரு தோப்பை வந்தடைந்தன.

காரைக்குடியின் ஐம்பது ரூபாய் எடையில் செய்யப் பெற்ற வெள்ளிக்காவடியுடன் நானும் என் மனைவியும் குழந்தைகளுடன் மூன்று நாட்கள் முன்னதாகவே காரைக்குடியிலிருந்து இருப்பூர்தி, பேருந்து மூலம் செட்டிக்குளம் வந்தோம். தியாகராச ரெட்டியார் வீட்டில் எலுமிச்சை தோட்டக்காரர் வீடு ஒருநாள் தங்கினோம். செட்டிகுளத்திற்கு மூன்று கல் தொலைவிலுள்ள பெரகம்பி என்ற ஊரிலிருக்கும் என் தாய்மாமன் பண்ணை நல்லப்ப ரெட்டியாரைப் பார்ப்பதற்காகக் குதிரைவண்டி அமர்த்திக் கொண்டு பெரகமபி