பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

திரு. K. இராமச்சந்திர அய்யர்

கல்வி புகட்டுவதில் இருமுறைகள் வழக்கத்திலுள்ளன. ஒன்று: பழைய முறை இதன்படி பாடத்தை மையமாகக் கொண்டு குழந்தைக்குக் கற்பித்தல். மற்றொன்று புதியமுறை. இதன்படி குழந்தையை மையமாகக் கொண்டு கல்வி புகட்டுதல், புதியமுறைக்கு வித்திட்டவர் ரூசோ (கி.பி. 1712-1778). இதனால் இவர் கல்விமுறையின் காபர்னிகஸ் என்று கூறுவர். பண்டையோர் பூமியை நடுவாகக் கொண்டு கதிரவன் முதலிய கோள்கள் இயங்குகின்றன என்று கருதிவந்தனர். காபர்நிகஸ் கதிரவனை நடுவாகக் கொண்டு பூமி முதலிய கோள்கள் இயங்குகின்றன என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தினார். இவரைப் போலவே ரூசோ கல்வி ஏற்பாட்டினைக் (Curriculum) நடுவாகக் கொண்டு கற்பிக்கப் பெற்ற முறையைத் தவறு எனக் கண்டித்துக் குழந்தையை நடுவாக வைத்துக் கற்பிக்கும் முறைதான் ஏற்றது என்று கூறினார் இவர் கொள்கை உளவியல் உண்மைகளை ஒட்டியும் உள்ளது திரு. இராமச்சந்திர அய்யர் (1931-34) இரண்டு முறைகளையும் தெளிவாகப் புரிந்து கொண்டவர். மாணவனைத்தான் இவர் முக்கியமாகக் கொண்டார்; பாடத் திட்டத்தை அவனது மனத்திற்கேற்றவாறு பக்குவப்படுத்திக் கொள்வார். இன்று பால், கேழ்வரகு, கோதுமை அரிசி மாவைக் குழந்தைகளின் செரிமானத்திற்கேற்றவாறு பக்குவப்படுத்தி விற்கப் பெறுகின்றன அல்லவா? அவைபோல் இன்று பாட நூல்கள் எவ்வளவு கவனமாக எழுதப்பெற்ற போதிலும் அவற்றைப் பல ஆசிரியர்கள் சரியாகக் கையாளத் தெரியாதலால் எல்லாப் பாடங்கட்கும் வெற்றித் துணைவன் என்பது போன்ற பாடக் குறிப்புகள் (Notes) புத்தகச் சந்தையில் வெள்ளம் போல் பெருகி