பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நீங்காத நினைவுகள்

அடங்குகின்றது. சிலர் இதை "ஆசிரியர் பாடம் தயாரித்தல்" என்று கூறுவது பொருந்தாது. பி.ஏ. பி எட் படித்த ஆசிரியர் இலாப நட்டம்" கணக்கைத் தயாரித்துக் கொண்டு வந்து போதித்தல் என்பது தவறு. அவர் இதனை மாணாக்கர் மனத்தில் ஏற்றுவதற்கு எப்படி அவர்தம் மன்த்தைப் பக்குவப்படுத்தி ஏற்ற வேண்டும் என்று கொள்வதே பொருத்தமாகும்.

நான் துறையூர் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியனாக ஒன்பதாண்டுகள் (1941-1950 பணியாற்றியபோது முதற் படிவத்தி லிருந்து பள்ளியிறுதித் தேர்வு வரை பொது அறிவியலும், நான்காம் படிவத்திலிருந்து பள்ளியிறுதித் தேர்வு வரை ஆரம்ப கணிதமும், ஐந்து ஆறு படிவங்களில் இயற்கணிதமும் (Algebra) வடிவ கணிதமும் (geometry). பள்ளியிறுதித் தேர்வு ஆறாம் படிவம் மாணாக்கர்கட்கு ஆங்கிலமும் கற்பித்தேன். இக்காலத்தில் எ-பிரிவு சி-பிரிவு பாடங்கள் யாவும் தமிழிலேயே கற்பிக்கும் முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒன்பதாண்டுகள் துறையூரிலிருந்த போது இடைநிலைப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள். பி.டி. தேர்வு பெற்ற ஆசிரியர்கள். தமிழ் கற்பித்த தமிழாசிரியர்கள் இவர்கள் கற்பிக்கும் முறையைக் காணும் வாய்ப்பும் இருந்தது.

ஒன்பதாண்டுகட்குப் பிறகு காரைக்குடி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிப் பேராசிரியனாகப் பத்தாண்டுகள் (1950-60) பணியாற்றியபோது தமிழ் பயிற்றும் முறைகளைப் பற்றிச் சிந்திக்கவும், சிந்தித்தவற்றைப் பயிற்சி பெறும் பி.டி. வகுப்பு மாணாக்கர்கட்குச் சொல்லவும் வாய்ப்பு ஏற்பட்டது. இது தவிர, உள்ளுர் சுற்றுப்புற ஊர்களிலுள்ள உயர்நிலைப் பள்ளிகட்கு பி.டி. மாணாக்கர்களை இட்டுச் சென்று அப்பள்ளிகளில் பாடங்களைப் பயிற்று முறைகளைக் கவனிக்கச் செய்யவும், கவனித்தவற்றைப் பயிற்சி மாணவர்களிடம் கலந்தாயவும் வாய்ப்புகள் இருந்தன.

2 -g!,êìfluff u IL-ğø5 @&larš©55øø Preparation, Presentation, Comparison, Generalisation, Application crgis). QRIO'Lofti &#5 படிகளாகக் காட்டுவர்