பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K. இராமச்சந்திர அய்யர் 21

இக்காலத்தில் பயிற்றுமுறைகள், கல்வி உளவியல்பற்றிய பல்வேறு நூல்களைப் பயிலவும் பயின்றவற்றைச் சிந்திக்கவும், சிந்தித்தவற்றை மாணாக்கர்கட்கு எடுத்துச் சொல்லவும், அவர்களுடன் கலந்தாயவும் வாய்ப்புகள் இருந்தன.

பத்தாண்டுகள் இங்குப் பணியாற்றிய பிறகு திருப்பதி பல்கலைக் கழகத்தில் பதினேழு ஆண்டுகள் (1960-77 பணியாற்றிய போது பி. ஏ. எம் எ. எம்பில், பிஎச்டி மாணாக்கர்கட்குத் தமிழ் கற்பிக்கவும் ஆராய்ச்சிக்கு வழி காட்டவும் வாய்ப்புகள் நேரிட்டன நீண்ட என் கல்வி வாழ்வில் ஓய்வு பெற்ற பிறகு உயர் நிலைப் பள்ளிகளில் எனக்குக் கற்பித்த முறைகளைப்பற்றி நினைவு கூரும் போது சில சமயம் சில நாட்கள் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் இவற்றில் பாடம் சொன்ன பெரும் பேராசிரியர்களும் நினைவிலி ருந்து பேசுவதையும் உணர முடிகின்றது. ஆசிரியரே இன்றி குருபக்தியுடன பயின்ற ஏகலைவனின் வரலாறும் சிந்தனையில் எழத்தான் செய்கின்றது. சுமார் முப்பது ஆண்டுகட்கு மேல் வைணவ தத்துவம் பயின்ற நிலையில் ஆசாரியன் சீடனுக்குக் கற்பிக்கும் போது ஆசாரியன் தன் ஆச்சாரியனை நினைவில் கொண்டு அவர் கற்பித்த பாங்கில் கற்பிக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள வாய்ப்புகள் கிடைத்தன. இந்த அநுபவ அடிப்படையில் திரு கே. இராமச்சந்திர அய்யரை நினைவுகூர்கின்றேன்.

நினைவு - 1 : ஆரம்ப கணிதம் இயற்கணிதம், வடிவகணிதம் இவற்றைக் கற்பித்த முறைகள் நினைவில் எழ, இவற்றைக் கற்பித்த ஆசிரியர் என் உள்ளத்தில் குறிக்கோள் ஆசிரியராக நிரந்தர இடத்தைப் பெறுகின்றனர். கற்றலில் அக்கறையை உண்டாக்கல் கற்பிக்கும் முறையின் உயிர்நாடி என்பதை நன்கறிந்தவர் திரு. கே. இராமச்சந்திர அய்யர். "அக்கறை

3 இந்தப் பட்டறிவின் அடிப்படையில் (1 தமிழ் பயிற்றும் முறை, (2) அறிவியல் பயிற்றும் முறை, 3 கல்வி உளவியல், 4 கவிதை பயிற்றும் முறை (5 கவிதையநுபவம் ஆகிய நூல்களை எழுதி வெளியிட வாய்ப்புகள் ஏற்பட்டன.