பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K. இராமச்சந்திர அய்யர் 23

பெற்றிருக்கும் முல்லைமலர் போன்று நல்ல வெளுப்பான துணியாலான தலைப்பாகை இவர் தலையை அணி செய்யும். நெற்றியில் திகழும் திருநீற்றுப் பட்டையும், சந்தனப் பொட்டும் இவர்தம் பொன்னிற முகத்திற்குப் பொலிவூட்டும் புன்முறுவல் பூத்தமுகம் அறிவொளியை வீசி நிற்கும். இவர் வகுப்பில் அமர்வதே இல்லை; இவர் அங்கவஸ்திரம் அணிவதில்லை. வகுப்பில் நுழையும் போதே கரும்பலகைத் துடைப்பான் சாம்பல் நிறத் துணியாலானது, நாலைந்து சுண்ணக்காம்புகள் கொண்டு வருவார். வரலாற்று ஆசிரியர் கதை சொல்லுவது போல் ஆரம்ப கணிதத்திலுள்ள கணக்கின் சூழ்நிலையை உண்டாக்கி விடுவார். இலாப-நட்டம், கூட்டு வாணிகம், வட்டிக் கணக்கு. கூடுவட்டி (Compound Interest) இவற்றைக் கற்பிப்பது அற்புதமாக இருக்கும் வகுப்பறையிலி ருப்பதை மறந்து அங்காடித் தெருவில் இருப்பது போன்ற சூழ்நிலையை உண்டாக்கிவிடுவார் நாங்களே முதல் ப்ோட்டுக் கூட்டு வாணிகம் நடத்துவது போலவும், கந்து வட்டிக் கந்தாமிக் கடையில் வட்டிக்குக் கடன் வாங்குவது போலவும், காஃபிப் பொடிக் கடையில் காஃபித்துளில் சிக்கரித் துளைக் கலப்பது போலவும், மண்டியில் தேங்காய் சருக்கரை மூட்டைகள் வண்டியில் வந்து இறங்குவது போலவும் உணர்ச்சியை எழுப்பி விடுவார். கற்பிக்கும் செய்திகள் அன்றாட வாழ்க்கையில் இணைந்து விடுவதால் கணக்கு பற்றிய புள்ளி விவரங்கள் கரும்பலகையில் மணிமணியான எழுத்துகளால் பொறிக்கப் பெறும்போது கருத்துகள் மனத்தில் ஆழப்பதிந்து விடுகின்றன.

flangna - 3 : “smogplb giggplb" (Time and Distance) என்ற ஆரம்ப கணிதப் பாடப் பகுதியை மிகுந்த உற்சாகத்துடன் கற்பித்தமை இப்போது நினைவில் குமிழியிடுகின்றது. (1) 900 அடி நீளமுள்ள சரக்கு இரயில் மணிக்கு 20 மைல் வேகத்தில் வருகிறது. அதன் எதிர்த் திசையிலிருந்து 660 அடிநீளமுள்ள விரைவு இரயில் வண்டி 40 மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கின்றது இரண்டு வண்டிகளும் ஒன்றையொன்று கடக்க எவ்வளவு நேரம் ஆகும்? 2. 800 அடிநீளமுள்ள பயணிகள் வண்டி மணிக்கு 30 மைல் வீதம்