பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நீங்காத நினைவுகள்

செல்கிறது. இது இரயில் வண்டி மேடையை 2 நிமிடங்களில் கடந்து சென்றால் மேடையின் நீளம் என்ன? இம்மாதிரியான கணக்குகளைக் கற்பிக்கும்போது மாணாக்கர்கள் இரயில் வண்டிகள். இரயில் நிலையம், எதிர்த் திசையில் வரும் வண்டிகள், ஒரே திசையில் வெவ்வேறு வேகங்களில் செல்லும் வண்டிகள் இவற்றை மானசீகமாப் பார்த்தல் வேண்டும். அக்காலத்தில் நாட்டுப்புறங்களிலி ருந்து வரும் மாணாக்கர்களில் பெரும்பாலோர் இரயிலைப் பார்க்காதவர்கள். நகர்ப்புறங்களிலிருந்து வரும் மாணாக்கர்கள் இரயிலைப் பார்த்திருந்தபோதிலும், இத்தகைய கணக்குகளைச் செய்யும்போது மானசீகப் பார்ப்பது அருமை நேரில் பார்க்கும்போது ஒருவித தெளிவும் பெற வாய்ப்புண்டு ஆகவே, மாணாக்கர்களிடம் அக்கறை தோன்றவும், கணக்கு போடுவதற்கு அவர்கள் மனத்தைத் தயாரிக்கவும் திரு கே. இராமச்சந்திர அய்யர் தம் வகுப்பு மாணாக்கர்களை முசிறியிலிருந்து படகுகள்மூலம் குழித்தலைக்கு இட்டுச் செல்வார். காலை உணவு உண்டு, கையில் சிற்றுண்டியை எடுத்துக் கொண்டு சுமார் பத்து மணிக்குப் புறப்படுவோம். குழித்தலை இரயில் நிலையத்தில் எதிர்த்திசையில் வண்டிகள் வருவதைப் பார்ப்பதற்கும். வண்டிகள் நிலைய மேடையைத் தாண்டுவதை நேரில் காண்பதற்கும். பல மணி நேரம் "தவம்" கிடப்போம் வண்டிகள் வராதபோது, வண்டிகள் மேடையைக் கடப்பதைபற்றி விளக்குவார் கணக்கு ஆசிரியர் நிலையத்தின் ஒரு கோடியை இஞ்சின் தொட்டு, மறு கோடியை வண்டியின் கடைசிப் பெட்டி கடப்பதைத்தான் வண்டி மேடையைக் கடந்தது என்ற உண்மையை விளக்குவார். வண்டிக்காகக் காத்திருக்கும் நேரத்தில் கணக்குபற்றிய பல்வேறு குறிப்புகளைத் தந்து விளக்குவார்.

இவர் இயற்கணிதத்தில் வாய்பாடுகளைக் (Formulae) கற்பிப்பதிலும் அவற்றின் அடிப்படையில் கணக்குகள் செய்யும்போது ஒவ்வொரு படியிலும் இந்த வாய்பாடுகள் விரிந்து செல்வதைப் பொருத்திக் காட்டுவதிலும் அற்புதமான கைவரிசைகளைக் காட்டுவர். வடிவகணிதத்தில் கடாத் தீர்வுக் (Riders) கணக்குகள் போடும்போது மாணாக்கர்கள் ஒவ்வொரு