பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K. இராமச்சந்திர அய்யர் 25

படியிலும் சிந்திக்க வாய்ப்புகள் தருவார் இக்கணக்கைச் செய்யும்போத முதலில் கரும்பலகையில் வரைபடத்தைப் போட்டு மாணாக்கர்களை சிந்திக்க வைப்பார், துப்புத் துலங்காமல் விழிக்கும் எங்களை வரைபடத்தில் வினைவழியை (Construction) வரைந்து மேலும் சிந்தனையைத் தூண்டுவார் திருக்கோயிலில் அலங்கார தீபம் காட்டும்போது கருவறையில் ஆண்டவனின் திருவுருவம் நன்கு புலப்படுவதுபோல் வரைவழி வரைந்து காட்டியவுடன் கணக்கின் தீர்வு (Solution) பளிச்சென்று பலருக்குத் தட்டுப்படும் வினாக்களை விடுத்துக் கொண்டே படிப்படியாகக் கணக்கின் தீர்வை எழுதிக் காட்டுவார். எங்கட்கெல்லாம் இராமலிங்க அடிகள் காட்டும் "ஜோதி"யைத் தரிசித்தது போன்ற உணர்வு கிளர்ந்தெழும்.

திரு. கே. ஆர். நல்ல அநுபவம் பெற்ற தெலுங்குப் பார்ப்பனர். கருவிலே திருவுடையவர். அதாவது பிறவியிலேயே ஆசிரியர்க்கூறு வாய்க்கப் பெற்றவர். பயிற்சிக் கல்லூரியில் தாம் பெற்ற பயிற்சியும், நீண்ட நாள் கற்பித்த அநுபவமும் அவரைச் சிறந்த ஆசிரியராகச் செய்து விட்டன. தவிர, இவர் கல்வி புகட்டுதலில் மாணாக்கன்தான் மையமேயன்றி புகட்டப்பெறும் பாடம் அல்ல என்ற ரூசோவின் கொள்கையை மறையாகக் கொண்டு கற்பித்த பெருமகனார். முலைப் பாலையும் விலைப் பாலையும் குழந்தையின் செவ்வியறிந்து ஊட்டும் அன்னையைப் போலவே, மாணக்கர்களின் மனநிலை தெரிந்து விதி வருமுறையையும் (Inductive method) விதி விளக்கு முறையையும் (Deductive method) கலந்து கையாளும் வித்தகர். இவர் கற்பித்த முறைதான். ஊட்டிய உணர்வுதான் பட்டப் படிப்பு முடியும் வரையிலும் என்னைக் கணிதத்தில் தலையாய மாணாக்கனாகத் திகழச் செய்தது என்பதைப் பக்தியுடனும் நன்றியுடனும் நினைவு கூர்கின்றேன்.

நினைவு - 4 : நான் முசிறியில் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த போது ஜூன் 1931 பள்ளி புதிதாக கட்டப் பெற்ற கட்டத்திற்கு வந்து விட்டது. பழைய கட்டடம் வட்ட அலுவலகத்திற்கு எதிரிலுள்ளது ஐயம்பாளையம் தாண்டவராய பிள்ளையவர்கட்குச் சொந்தமானது. பள்ளி இதில் நடைபெற்றபோது மாவட்ட வாரியம்