பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K. இராமச்சந்திர அய்யர் 29

நெய் கலந்து சாப்பிட்டால் உமட்டுகின்றது. இன்றளவும் நெய் கலந்த பருப்புச் சோறு, சாம்பார் சோறு உண்பதே இல்லை இஃது எனக்கே வியப்பாக உள்ளது.

நினைவு - 7 : நான் கல்லூரியில் படிக்கும் போது மாணவர் விடுதி விஷயமாக கே.ஆர். மிகவும் தொல்லைப்பட்டார் என்பதை அறிந்து வருந்தினேன். முசிறி மலபார் விடுதி இராமசாமி அய்யர் திருமகன் - வேங்கடாசலம் என்பார் - இவர் கே.ஆரின் மாணவர் - தான் இவர் பட்ட தொல்லைக்கெல்லாம் அடிப்படைக் காரணமாக இருந்தார் என்பதும் தெரிய வந்தது விவரம் என்னால் அறியக்கூட இல்லை. பின்னர் கே.ஆர். குழித்தலை கழக உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த சமயம். நான் அப்போது துறையூர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியன். அப்போது மாவட்ட வாரியத் தலைவர் அறியலூர் வேங்கடாசலம் பிள்ளை என்பார். தலைவருக்கும், தலைமை ஆசிரியருக்கும் ஏதோ மனத்தாங்கல். குழித்தலையில் நடைபெற்ற திரு. கே.ஆரின் மகள் திருமணத்திற்கு நானும் தும்பலம் A. சுப்பையா (என் வகுப்புத் தோழர்வும் சென்றிருந்தோம். சுப்பையா முசிறியில் ஒரு சிறிய கடை வைத்திருந்தார். அப்போது மாவட்ட வாரிய அலுவலகத்திலிருந்து தனியாள் மூலம் ஓர் ஆணை வந்தது அன்று முதல் அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்பதாக, கே.ஆருக்கு இது எதிர்பாராத அதிர்ச்சி. நானும், சுப்பையாவும் துன்பப்பட்டோம். உடனே பழைய மாணவர்கள் சார்பில் ஒரு குழு அமைத்து அவருக்கு ஒரு "பொற்கிழி தருவதாக முடிவு செய்தோம். நான்கு மாதத்தில் சுமார் ரூ. 900/- வசூலானது. முசிறி உயர்நிலைப் பள்ளியில் விழாவொன்று அமைத்து அப்பண முடிப்பை வழங்கினோம். இஃது ஒரளவு கே.ஆருக்கு மனஅமைதி பெறுவதற்குத் துணையாக இருந்திருக்கும். அக்காலத்தில் ரூ. 900/- என்பது ஒரு கணிசமான தொகை.

நினைவு - 8 : கே.ஆர் சென்னை வேப்பேரியில் சென்று ஏதோ ஒரு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது நான் காரைக்குடி