பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நீங்காத நினைவுகள்

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியன் 1950-60, 1953-54 என நினைக்கின்றேன். சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் கூட்டத்திற்கு வந்திருந்தபோது அவரை வேப்பேரியில் சந்தித்து அளவளாவியதாக நினைவு. மகளிர் பள்ளியிலிருந்தும் ஓய்வு பெற்ற பின்னர் மயிலை மணியின் தனிப் பயிற்சிக் கல்லூரி (ManisTutorial College) யில் கணித ஆசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றினார். ஒரு சமயம் இவரை இக்கல்லூரியில் சந்தித்து அளவளாவினேன். அப்போது நான் திருப்பதியில் பணிபுரிந்து கொண்டிருந்த காலம். இந்தக் கல்லூரியின் முதல்வர் திரு. சுப்பிரமணியம் இவருடைய மாணாக்கராதலால் இறுதிவரை இவரைத் தம் தந்தை போல் பாராட்டி பாதுகாத்து வந்தார் இவருடைய சதாபிஷேகத்தையும் இவரே தம் செலவில் நடத்தி வைத்தார். நான் திருப்பதியில் பணியாற்றி வந்த காலம் அது (1960-77. ஏதோ முக்கியமானதொரு கருத்தரங்கு என் பொறுப்பில் நடைபெற்று வந்ததால் இந்த விழாவில் நான் கலந்து கொள்ள முடியாதநிலை நேரிட்டு விட்டது. வாழ்த்துச் செய்தி மீட்டிலும் அனுப்பி வைத்தேன்.

நினைவு - 9 : திருப்பதியில் ஓய்வு பெற்று சனவரி 1978) சென்னையில் குடியேறினேன். அந்த ஆண்டு சூலையில் என் பேத்தியின் ஓராண்டு முடிந்து பிறந்த நாள் விழாவைச் சிறிய அளவில் கொண்டாடினேன். அவ்விழாவிற்கு கே.ஆர். வந்திருந்து குழந்தையை ஆசீர்வதித்தார். வேட்டி, அங்கவஸ்திரம் வழங்கி மரியாதை செய்தேன். அப்போது தமிழ்க் கலைக் களஞ்சியம் இரண்டாம் பதிப்பு முதன்மைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றி வந்த காலம் பதினைந்து திங்கள், வண்டி வைத்து துணையுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். அப்போது அவர்தம் முதல் மகளுடன் தியாகராயநகரில் இரயில்வே பார்டர் சாலை வாழ்ந்து வந்தார். என்ன காரணத்தாலோ அவர் மகனுடன் வாழவில்லை.

அதன் பிறகு ஓரிருமுறை இவரைச் சந்தித்து அளவளாவியதுண்டு. ஒரு முறை ரூ. 100/= தந்தால் உதவியாக இருக்கும் என்றார் 1980 என்பதாக நினைவு. அப்போது நான் கலைக் களஞ்சியப் பணியில் இல்லை. சென்னை வாழ்வில் பொருளாதார