பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

வழக்குரைஞர் P. அரங்கசாமி ரெட்டியார்

"பழந்தோழர் தமைக் கண்டு பாசமுடன் அரவணைத்துப்" பேசும் பண்பும், நண்பர்களின் மத்தியிலே நகைத்து மகிழும்பேறும் எனக்கு உண்டு என்று என்னைப் பற்றி திறனாய்வார் என் அரிய நண்பர் திரு. பூ அமிர்தலிங்கம் (ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்). அது மட்டுமல்ல என்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து மீளா உலகம் சென்ற நண்பர்களை அரவணைத்துப் பேசும் பண்பும் நினைந்து அவர்களைப்பற்றி அசைபோடும் பண்பும் - என்னிடம் உண்டு. அந்தப் பண்பின் அடிப்படையில் என் அருமை நண்பரும் என்னை விட இரண்டாண்டு மூத்தவருமாகிய வழக்குவரைஞர் P அரங்கசாமி ரெட்டியார் (வைகுந்தத்தில் வாழ்பவர் பற்றிய நீங்காத நினைவுகளை நான் இங்குப் பதிவு செய்கின்றேன். இவர் துறையூருக்குச் சுமார் எட்டு கல் தொலைவிலுள்ள வேங்கடாசலபுரம் எந்த சிற்றுரில் பிறந்தவர். திருச்சியிலிருந்து 19 ஆண்டுகட்கு.முன்னர் மீளா உலகம் சென்றவர்.

நினைவு - 1 : 1934 ஏப்பிரல் திங்களில் முதன்முதலாக எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது அரங்கசாமி ரெட்டியார் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிப்பில் இருந்தார். நான் பள்ளியிறுதித் தேர்வு எழுதி முடிவு வெளிவராத நிலை கல்லூரியில் சேர வேண்டிய நிலையில் இருந்தேன். கல்லூரியில் இடைநிலைவகுப்பில் கணிதம் இயற்பியல் வேதியியல் (MPC) பிரிவில் சேருமாறு பணித்ததார்; புனித சூசையப்பர் கல்லூரியில் சேருமாறும் யோசனை கூறினார். இந்த சந்திப்பு செங்காட்டுப்பட்டி அரங்கசாமி ரெட்டியார் திருமணத்தில் நிகழ்ந்தது நான்கு நாள் திருமணம் மூன்று நாள்