பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. அரங்கசாமி ரெட்டியார் 35

தந்தை ஜெரொம்டிசெளகாவின் சான்றிதழ் 3 சர்டி தேசிகாரியாரிடம் பெற்ற சான்றிதழ் (4) திரு K.C. சப்தரிஷி ரெட்டியார் காட்டுப்புத்துர்) அளித்த சான்றிதழ் 15 திரு தி.மு. நாராயணசாமிப் பிள்ளை அளித்த சான்றிதழ் - இவற்றின் நகல்களும் பதிவு அஞ்சலில் திரு. P.M. வேங்கடாசல துரை, வழக்குரைஞர், துறையூர், திருச்சி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பிட்டுப் பொட்டணம் என் மனைவி ஊர் சென்றேன். திரு. அரங்கசாமி ரெட்டியாருக்கும் அப்போது திருமணமாகியிருந்தது. மாமனார் ஊர் செந்தாரப்பட்டி

நினைவு - 3 : 1941-இல் ஜூன் மாதத்தில் அரங்கசாமி ரெட்டியார் துறையூரில் வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கினார். நானும் அதே ஆண்டில் அதே மாதத்தில் பெருநிலக் கிழவர் நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் பணியை ஏற்று என் வாழ்க்கையைத் தொடங்கினேன். நான் பணியாற்றிய பள்ளியும், அவர் பணியாற்றிய மாவட்ட நீதிமன்றமும் (DistrictMunsit's Court) எதிரெதிரே இருந்தமையால் அடிக்கடிச் சந்திக்கும் வாய்ப்பிருந்தது. எனக்கு நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் பழக்கமானவர்கள். ஆனால் தொழிலில் நேர்மையுடன் நடந்து கொள்ளும் இவரைப் போல் மற்றொருவரைக் காண்டல் அரிது. எழுத்தருக்கு மாதச் சம்பளமாக ரூ. 30/= உம் ஒரு கல நெல்லும் தந்தார். எந்த வழக்குரைஞர் அலுவலகத்திலும் ரூ. 10/= க்கு மேல் மாதச் சம்பளம் தருவதில்லை. இவர் அலுவலக எழுத்தருக்குப் பல்வேறுவாத எழுத்து வகைகட்கு வழக்குப் பிராது. டிக்ரி நிறைவேற்றல் மனு, சாட்சி சம்மன் அனுப்புதல் போன்றவை இவ்வளவுதான் வாங்க வேண்டும். இதற்கு மேல் கட்சிக்காரர்களைத் தொந்தரவு செய்து அதிகமாக வாங்குதல் கூடாது. என்பது இவர்தம் கட்டளை. அக்காலத்தில் இவர் தந்த சம்பளம் அரசு அலுவலகத்தில் எழுத்தருக்குக் கிடைத்த ஊதியத்திற்குச் சமமாகும், வக்கீல் அலுவலக எழுத்தர்கள் எட்டாவது மூன்றாவது படிவம்) படித்திருந்தால் போதும். ஐந்தாவது வரை படித்தவர்களே பெரும்பாலும் அக்காலத்தில் இப்பணிகளை அநுபவத்தால் செய்து வந்தனர். வேறுவக்கீல் அலுவலகங்களில் பணியாற்றுவோருக்குக்