பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. அரங்கசாமி ரெட்டியார் 41

"வெளியே நட" (Get out) என்று கூறிவிட்டார் முனிசீப்பு இவ்வாறு பொது மனிதரிடம் நடந்து கொண்டது தவறு; பெருந் தவறு. அன்று மாலையே வக்கீல் சங்கம் (Bar Association) கூடி முன்சீப்பின் அடாத செயலைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றி மாவட்டச் சங்கத்திற்கு அனுப்பியது மாவட்டச் சங்கமும் கூடி இத்தீர்மானத்தை உயர்நீதிமன்ற வக்கில் சங்கத்திற்கு அனுப்பி வைத்தது. சென்னை சங்கமும் முனிசீப்பின் அடாத செயலை வன்மையாக கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றி உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பியது. முனிசீப்பிற்கு தண்டனை வழங்கவும் பரிந்துரைத்தது. இதில் விரைவான முடிவு ஏற்படவில்லை. பார்ப்பனர்கள் ஒன்று திரண்டு முனிசீப்பைக் காப்பாற்ற நினைத்தனர்.

"வெளியே நட" என்று முனிசீப்பு சொன்ன நாளிலிருந்து சுமார் ஓராண்டு அரங்கசாமி ரெட்டியார் துறையூர் நீதிமன்றத்திற்குப் போவதைத் தவிர்த்தார். உயர்நீதிமன்றம் நீதி வழங்க மெத்தனமாக இருந்ததால், அரங்கசாமி ரெட்டியார், இருபத்தையாயிரத்திற்குத் (ஒராண்டுத் தொழில் வருமானம் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். முனிசீப்பிற்கு அறிவிப்பு (Notice) அனுப்பிய பிறகே இந்த வழக்கு தொடுக்கப் பெற்றது. முனிசீப்பிற்கு கதி கலங்கியது. தாம் தவறாக இவருடன் மோதிக் கொண்டது பற்றி மிகவும் வருந்தியதாகக் கேள்வி. அரசியல் கலப்பு அதிகம் இல்லாத காலத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இன்றைய நிலையில் நிர்வாகத்தில் நீதி வழங்குவதில் அரசியல் தாண்டவமிடுகின்ற நிலையில் நீதித் துறையிலும், நிர்வாகத் துறையிலும் என்னென்ன தவறுகள் நடைபெறுகின்றனவோ? இவற்றையெல்லாம் கண்மூடி மெளனியாகிக் கவனித்துக் கொண்டிருக்கும் இறைவனது குறுக்கீட்டால்தான் கதிமோட்சம் ஏற்படவேண்டும். திக்கற்றவருக்குத் தெய்வம்தானே துணை?

பார்ப்பன வழக்கறிஞர்களில் சிலர் முனிசீப்புமீது கருணை கொண்டு இருபத்தையாயிரத்துக்குத் தொடுக்கப் பெற்ற வழக்கைத் தொடராது திரும்பப் பெறுமாறு அரங்கசாமி ரெட்டியாரை