பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நீங்காத நினைவுகள்

வேண்டினர். சில திங்கள் கழித்து வழக்கைத் திரும்பப் பெற்றார் ரெட்டியார். முனிசிப்புக்கு இதில் கிடைத்த தண்டனை அவர் ஊதியத்தில் மூன்று ஆண்டுகட்குப் படி ஏற்றம் (increment) இல்லை என்பது ஒரு பெரிய அதிகாரிக்கு இதுவே பெரிய தண்டனையாகும்.

இந்த முனிசீப்பு ஒர் அமீனாவுடன் தவறாக மோதி அவமானப்பட்டார். ஒவ்வொரு மாதத்திற்கும் முனிசிப்பு வீட்டிற்கு ஓர் அமீனா காவலாக இருப்பது வழக்கம். கோடை விடுமுறையில் எல்லா முனிசிப்புகளும் அவரவர் ஊருக்குப் போய்விடுவர். ஆனால் இராமாநுசம் இங்கேயே தங்கியிருந்தார். ஓர் அமினாவைக் காவல் வேலைக்குப் போட்டார். அவர் "விடுமுறையில் கூட எங்கள் உயிரை இப்படி ஏன் வாங்குகின்றீர்கள்?" என்று சொல்லி பணியை மறுத்தார். ஏதோ காரணம் காட்டி அமீனாவைப் பதவி நீக்கம் செய்தார். அமீனா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வென்று, மீண்டும் பதவியில் வந்து சேர்ந்தார். முனிசீப்பின் கெளரவம் மலையேறி விட்டது. அவர் மாற்றல் இல்லாமல் துறையூரிலேயே பணியாற்றியது பரிதாபகரமாகவே இருந்தது.

நினைவு - 9 : நான் துறையூரிலிருந்த காலத்தில் ஒரு சுவையான வழக்கு நடைபெற்றது. அதுவும் ஈண்டு நீங்காத நினைவாகப் பதிவு செய்யப்பெறுகின்றது. செகப்பிரியன் துன்ப நாடகத்திலும் சில இடங்களில் சிரித்து மகிழ இடம் உண்டு. துறையூருக்கருகிலுள்ள உப்பிலியபுரத்தில் இராமசாமி ரெட்டியார் என்ற ஒருவர் இருந்தார். இவரைப் பொதுவாக மக்கள் குறிப்பிடும் போது "குரங்கு ரெட்டி" என்று சொல்லுவார்கள். இஃது அவருக்கும் தெரியும். ஒல்லிய உடம்பு தலையில் அதிக முடி இல்லை. இடுப்புக்கு மேல் திறந்த மேனியாக இருப்பவர். அவர் ஒரு மரத்தடியிலுள்ள கல்லின்மீது முன்பக்கம் சற்றுச் சாய்ந்த நிலையில் இருக்கும்போது குரங்கு தோற்றம் தென்படும். இதுவே மக்கள் அவருக்குக் குரங்கு ரெட்டி" என்ற திருநாமம் சூட்டியதற்குக் காரணமாகலாம். குரங்கு ரெட்டி தோட்டத்தில் நல்ல மாம்பழங்கள் கிடைக்கும் என்று சொல்லும்போது இயல்பாகச் சொல்லுவதுபோல் இருக்கும். ஆனால்