பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நீங்கத.நினைவுகள்

நினைத்துக் கொள்வேன். இராமசாமி ரெட்டியாரையும் மனத்தில் கெட்ட எண்ணமுமின்றி குரங்கு ரெட்டி என்று குறிப்பிட்டிருப்பேன். பலர் இவரை அவ்வாறு அழைப்பதால், இதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனக்கும் அவருக்கும் எந்த வித விரோதமும் இல்லை. அவரை நேரில் கூட குரங்குத்தம்பு' என்றுகூட பலமுறை குறிப்பிட்டிருக்கின்றேன்"

நீதிபதி இரண்டு பேர்களின் வாக்கு மூலங்களைச் சீர்தூக்கி ஆராய்ந்தார். வழக்கின் போக்கையும் அதனை நடத்திய அரங்கசாமி ரெட்டியாரின் நகைச்சுவைப் பண்பையும் எண்ணித் தம்முள் நகைத்திருக்க வேண்டும் "வழக்கில் உப்பு சப்பு இல்லை" என்று கூறித் தள்ளுபடி செய்தார். அக்காலத்தில் துறையூரில் இந்த வழக்கு பொதுமக்களிடமே அம்பலமாகி அவர்கள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்ததை நான் நேரில் கேட்டிருக்கின்றேன்.

நினைவு - 10 : பதினோர் ஆண்டு வழக்குரைஞர் வாழ்வில் பொதுமக்களிடம் நல்ல பேர் வாங்கி விட்டார். சாதி வெறி சமய வெறி அற்றநிலையில் எல்லாச் சாதியாரிடமும் நன்கு பழகி நற்புகழ் பெற்றிருந்தார். தந்தை பெரியாரிடம் நெருக்கமாகப் பழகுபவர். இந்நிலையில் 1952இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். இக்காலத்தில் பல்வேறு சமூகப் பிரச்சினைகைளைத் தீர்மானங்கள் மூலமாகவும் கேள்விகள் மூலமாகவும் அரசுக் கவனத்திற்குக் கொணர்ந்து அவற்றிற்குத் தீர்வு கண்டார். அவற்றையெல்லாம் இப்போது நினைவுகூர முடியவில்லை பெரும்பாலும் கோவாப்பரேட்டிவ் நிறுவனங்களிலுள்ள ஊழல்களை அம்பலப்படுத்தினார் என்பதை மட்டிலும் நினைவு கூரமுடிகின்றது. நம் அருமைமிகு இராஜாஜி முதலமைச்சராக இருந்தமையால் பெரும்பாலான பிரச்சினைகட்கு உடனுக்குடன் தீர்வு காண முடிந்தது என்பதைச் சொல்லிச் சொல்லி மகிழ்வார்.

நினைவு 11 : இவர் சட்டசபை உறுப்பினராக இருந்த போது (1952-57) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றினை மட்டிலும் நினைவுகூர முடிகின்றது. துறையூருக்கு நான்கு கல்