பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. அரங்கசாமி ரெட்டியார் 45

தொலைவிலுள்ளது சிக்கத்தம்பூர் என்ற சிற்றுர் துறையூர் - ஆத்தூர் சாலையின்மீதுள்ளது அக்காலத்தில் சாதி இந்துக்களுக்கும் (பெரும்பான்மையானவர்கள் ரெட்டியார்கள் திருக்குலத்தோர்க்கும் அரிசன மக்கள் வேளாண்மை சம்பந்தமாக அடிக்கடி மோதல் இருந்து கொண்டிருந்தது திருக்குலத்தோர் சார்பாக செக்காடுபவர் (Oil-monger) ஒருவர் தரகர்போல் இருந்து கொண்டு காவல் துறைக்குக் கையூட்டு செய்தும், தாம் அவர்களை அட்டைபோல் உரிஞ்சியும் பிழைப்பை நடத்தி வந்ததால் இருதரப்பினருக்கும் எந்தவித உடன்பாடும் ஏற்படாமல் இருந்து வந்தது அரங்கசாமி ரெட்டியார் இருசாராரையும் ஒன்று கூட்டி ஒரு சுமுகமான உடன்பாடு காண முயன்று வந்தார். அப்போது மாவட்டக் காவல்துறைத் தலைவராக (D.S.P) இருந்தவர் இதனை விரும்பவில்லை. தம் மாமூல் வருமானம் இதனால் பாதிக்கப்படும் அல்லவா?

எப்படியாவது சட்டமன்ற உறுப்பினரைக் குற்றம் சாட்டி உள்ளுக்குத் தள்ளத் திட்டம் போட்டிருந்தார் காவல் அதிகாரி. இதை அரங்கசாமி ரெட்டியாரும்.எப்படியோ அறிந்து கொண்டார் இந்தக் காவல்துறை அதிகாரிeது பொதுமக்களால் சாட்டப்பெற்ற குற்றச்சாட்டுகளும் ஏராளமாக இருந்தன. கையூட்டு, மகளிர் நேசம், அடாவடித்தனமான செயல்கள், அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துதல் போன்றவை சில. இவற்றுள் தலையானது ஓர் துணை ஆய்வாளரின் (Subinspector) துணைவியாரைக் கெடுக்க முயன்றது புதியவராகத் துறையில் சேர்ந்த இவரை ஒரு பந்தோபஸ்து வேலையாகத் தொலைவிடத்திற்கு அனுப்பிவிட்டு இலால்குடிக் கருகிலுள்ள வாளாடி என்ற சிற்றுரில் தந்தையாருடன் இருந்து வந்த அவர் துணைவியை நெருங்க முயன்றதில் அவர்தம் தோட்டத்துவேலையாட்கள் அவரை நையப்புடைத்துப் பாடம் கற்பித்தனர் மேலிடத்திற்குப் புகாரும் செய்தனர். இந்தப் பாடம் இவருக்குப் போதவில்லை ஆசை வெட்கம் அறியாதல்லவா?

ஒருநாள் அரங்கசாமி ரெட்டியாருக்கு ஒரு சிறுதுண்டுத்தாள் கிடைத்தது அஃது ஒரு காவல் துறைச் சேவகனால்தான் கிடைத்தது