பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நீங்காத நினைவுகள்

துணைவியாரின் தந்தையார் (இவர் ஒரு செட்டி வீட்டுக் கணக்கப்பிள்ளை தம் மருமகனிடம் "சுரப்பு" இருக்கிறதென்பதை நன்கு அறிந்து கறக்கும் வரையில் கறந்து பார்க்கலாம் என்று கருதித் தம் மகளைக் கொண்டு ஒரு வக்கீல் நோட்டிஸ் அனுப்பினார் தான் இவரை மணந்து கொண்டபோது கட்டில், மெத்தை, பீரோ, மேசை, நாற்காலி முதலியன கொண்டு வந்ததாகவும் அவை இவர் பொறுப்பில் இருப்பதாகவும், முப்பது சவரன் மதிப்புள்ள நகை முதலி யன இவர் வசத்தில் இருப்பதாகவும். இவற்றைத் தன்வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும்; இவை தவிர, மாதம் ஜீவனாம்சத்திற்கு ரூ 150/= தரவேண்டும் என்றும், தவறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இவற்றைப் பெற நடவடிக்கைகள் எடுக்கப் போவதாகவும் நோட்டிலில் குறிப்பிடப் பெற்றிருந்தது. தம் தம்பி வீட்டில் உணவு கொண்டு அமைதியாகப் பள்ளிப் பணியில் ஈடுபட்டு வாழ்ந்து வரும் தம் துறவு வாழ்க்கையில் ஒரு புயல் எழுந்தது போன்ற அச்சம் கிளர்ந்தெழுந்தது இவரிடம், நோட்டிசை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தார். இதில் எப்படியாவது தமக்கு உதவவேண்டும் என்று வேண்டினார்.

நான் சிந்தித்தேன். திருச்சி வக்கீல் திரு அரங்கசாமி ரெட்டியாரைக் கலந்து பேசி இதற்கு வழிவகைகள் காணலாம் என்று எண்ணி அவருக்குக் கடிதம் எழுதினேன் எங்கள் வழக்கு ஒரு ஜீவனாம்சம் வழக்கு என்று குறிப்பிட்டும் எழுதியிருந்தேன். திரு அரங்கசாமி ரெட்டியார் ஒரு நாள் குறிப்பிட்டுத் தாம் அந்நாளில் புதுக்கோட்டைக்கருகிலுள்ள ஓர் ஊருக்கு ஒரு முக்கிய அலுவல் நிமித்தம் வருவதாகவும் ஊர்ப் பெயர் இப்போது நினைவில் இல்லை நாங்கள் அங்கு வந்தால் உதவுவதாகவும் பதில் தந்திருந்தார்

வக்கீல் ரெட்டியார் குறிப்பிட்ட நாளில் அந்த ஊருக்குச் சென்று அவரைச் சந்தித்தோம் சொக்கலிங்கம் பிள்ளை தம் கதையை வக்கீலிடம் ஆதியோடந்தமாக விவரித்து விளக்கித் தமக்கு வந்த நோட்டீசையும் அவரிடம் தந்தார். உடனே வக்கீல் பதில் நோட்டீசுக்குத் திட்டமிட்டு அதில் பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்னர்த் தம்மை நட்டாற்றில் விட்டதுபோல் கைவிட்டுச்