பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நீங்காத நினைவுகள்

நினைவு - 18 : பதினாறு கட்டுரைகள் அடங்கிய "ஆன்மீகமும் அறிவியலும்" என்ற ஏன்நூல் ஆகஸ்டு, 1985 வெளிவந்தது. இந்த நூலை 1934 முதல் 1983 வரை அடியேனுக்கு. பாரதியார் வாக்கில் கூறினால்,

"நண்பனாய், மந்திரியாய் நல்லா சிரியனுமாய்

பண்பிலே தெய்வமாய்ப்

பார்வையிலே சேவகனாய்'

என்று இருந்த அரங்கசாமி ரெட்டியாருக்கு.

திறந்தெறிந் தறிவால் வழக்கினை ஆய்ந்து திறழ்பெறு வெற்றியே கண்டோர்; அரம்பொரு கூர்த்த மதியினர்; எதையும்

அறிவினில் புடமிட வல்லார்; பரம்பொருட் கன்பர் உயர்ந்தகல் லூரி

பண்பொடெற் களித்தநன் னண்பர்; தரம்பெறும் அரங்க சாமியாம் அன்பர்

சால்பிற்குப் படையலிந் நூலே!

என்ற பாடல் மூலம் அன்புப் படையலாக்கி மகிழ்கின்றேன்.

1985-அடியேன் விதைபோட்டு வளர்த்த திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையின் வெள்ளிவிழா ஆண்டு 1 இந்த நூலையும் 2 Collected Papers (3 வைணவ உரைவளம் 4) தம்பிரான் தோழர் என்ற நான்கு நூல்களையும் வெள்ளிவிழா வெளியீடுகளாக அரங்கசாமி ரெட்டியாரின் நான்காவது மகன் திரு. R. சுந்தர ராஜ் I.P.S வெளியிட ஏற்பாடு செய்தேன். இது இறைவனது திருக்குறிப்பாக அமைந்தது என்பது அடியேனின் நம்பிக்கை விழாவன்று திரு. R. சுந்தரராஜ் தம் பெற்றோர் P. அரங்கசாமி ரெட்டியார் திருமதி த. சத்தியபாமா நினைவாக தமிழ்த்துறையில் ரூ. 25,000,ல் ஓர்

6 பா.க. கண்ணன்பாட்டு (கண்ணன் என் சேவகன்)