பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நீங்காத நினைவுகள்

படக்காட்சிகளைக் காண்பதைத் தவிர்க்க அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை மேற்கொள்க. சனிக்கிழமை கல்லூரி நடைபெறுவதால் ஞாயிறுதோறும் எண்ணெய்க் குளியலைத் தவறாது கடைப்பிடிக்க, சனி நீராடு" என்பது பாட்டியின் வாக்கல்லவா? அது கண்ணுக்கும் நல்லது. "இணக்கம் அறிந்து இணங்கு' என்பதையொட்டி நல்லாரோடு பழகு. "நல்லிணக்கம் அல்லது அல்லற்படுத்தும்" என்பதைப் படித்திருப்பாய்" என்பன போன்ற அறிவுரைகளைத் தருவார். நன்றாக வளரும் செடிகளில் நோய்கள் தாக்குவனபோல் கல்லூரி வாழ்வில் முன் - குமரப்பருவம், பின் - குமரப்பருவத்திலிருக்கும் மாணாக்கர்கள் தீய பழக்கங்களாலும் தீயோர் கூட்டுறவாலும் கெட்டழிவது இயல்பு என்பதை நன்கு அறிந்த பேராசிரியர் முதலியார் கூறிய அறிவுரை இன்றளவும் என்னைக் காத்து நிற்கின்றது. சிறுசுருட்டுப் பழக்கம் என்னை நாடவில்லை. தீயோர் கூட்டுறவும் என்னைத் தீண்டவில்லை. உயர்நிலைப் பள்ளி வாழ்க்கையில் என்னைக் கட்டிக் காத்த திரு. கே.ஆர். போல், கல்லூரி வாழ்க்கையில் என்னைப் பட்டி மேயவிடாது காத்தவர் பேராசிரியர் முதலியார் என்பதை இன்றும் (என் 83வது அகவையில் 1998 நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். இவர் ஊட்டிய அறவுணர்வும் அடிக்கடிக் காணும் போதும் என்னைத் தமிழிலும் சிறிது கவனம் காட்டச் செய்தன. மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வையும் எழுதச் செய்தது. கலைமகள் அருளால் முதல் வகுப்பில் தேர்ச்சியும் பெற்றேன். "சார்ந்ததன் வண்ணமாதல்" என்ற சித்தாந்த உண்மையையும் இப்போது காண முடிகின்றது.

நினைவு - 2 : வடை சாப்பிட வந்தவன் வடையைச் சாப்பிட வேண்டுமேயொழிய அதன் துளையை எண்ணக் கூடாது என்ற தத்துவத்தை அறிந்து கொண்டேன். பேராசிரியர் நடேச முதலி யாரின் புலமையை எடைபோட நான் யார்? என்று என்னையே கேட்டுக்கொண்டு அமைதியுடன் அவர் கற்பித்தலில் ஆழங்கால் பட்டேன். அதன் பயனையும் அடைந்தேன். பேராசிரியர் நடேச முதலியாரின் மூடிய வெண்ணிறக் கோட்டு, பஞ்ச கச்சம். வெண்ணிறத் தலைப்பாகை இவர்தம் கருமையான கனத்த