பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. நடேச முதலியார் 59

திருமேனிக்குப் பொலிவூட்டும். இவர்தம் தலைப்பாகை அழகாக அமைவதில்லை; கலையுணர்வுடன் கட்டத் தெரியாத மனிதர் என்று கருதுகின்றேன். மூட்டைத் தூக்குபவனின் சும்மாடுபோல் தோன்றும். நெற்றியில் சமயக் குறி ஒன்றும் இல்லாததால் இவர் முகப்பொலிவு எங்களைக் கவர்வதில்லை உயர்நிலைப் பள்ளியில் என்னைக் கவர்ந்த குமார வீரய்யர். ஜம்புலிங்கக் குருக்கள் இவர்களது புறத்தோற்றம் என்னைக் கவர்ந்ததுபோல் இவர்தம் புறத்தோற்றம் மாணவர்களின் மனத்தைக் கவர்வதில்லை. அக்காலத்தில் இயற்பியல் துறையில் பணியாற்றிய திரு. பி.எஸ். சுப்பிரமணிய அய்யர், திருமண்டலம் அய்யர், வேதியியல் துறையில் பணியாற்றிய திரு. சேஷ அய்யங்கார், திரு. கோவிந்தராவ், கணிதத் துறையில் பணியாற்றிய திரு T. தோதாத்திரி அய்யங்கார், திரு கே. சீநிவாசன் (கால்குலஸ் சீநிவாசன், திரு. இராமச்சந்திரன் நான் படித்தபோதே திருநாடு அலங்கரித்தவர், திரு. சூரிய நாராயணன் இவர்கள் திருமேனி, முகப்பொலிவு இவற்றை அநுபவித்த எங்கட்குப் பேராசிரியரின் புறத்தோற்றம் கவர்வதில்லை.

வகுப்பில் இவர் உட்கார்வதில்லை. நின்றவண்ணமே பாடம் நடைபெறும் இஃது கற்பித்தலில் மிகவும் வேண்டப் பெறுவது. தமிழ் கற்பித்தலில் கவிதைப் பகுதியும் இலக்கணப் பகுதியும் மிகவும் முக்கியமானவை. இடைநிலை வகுப்புகளில் நான் கற்ற கவிதைப் பகுதிகள் இப்போது நினைவில் இல்லை. ஆனால் மிக்க சிரமத்துடன் கற்ற "காண்டவவன தகனச் சருக்கம்" (வில்லிபாரதம்) இன்றும் நினைவு கூரமுடிகின்றது. வடசொற்கள் அதிகமாக விரவி வருவதால் கற்பித்தலும் சிரமம் கற்போர்கள் மனத்தில் நிலைநிறுத்தல் அதனிலும் சிரமம் பேராசிரியர் இப்பகுதியை மிக நன்றாகக் கற்பித்தார். கவிதையின் கருத்துகள் மனத்தில் நன்கு பதியுமாறு கற்பித்தாரேயன்றி கவிதையை அநுபவித்து மகிழும் பாங்கில் கற்பிக்கவில்லை "கவித்ையநுபவம்", "பாட்டுத்திறன்", "கவிதை கற்பிக்கும் முறை" போன்ற நூல்களை எழுதிய எனக்கு, டி.கே.சி, ஜஸ்டிஸ் மகராசன், கலெக்டர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் ஆகிய பெரியோர்களின் கவிதை விளக்கம் கேட்ட எனக்கு.