பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. நடேச முதலியார் 61

என்பவை. இந்திரன் ஏவலால் மேகங்கள் பொழிந்த மழையைத் தடுக்க அருச்சுனன் சரக்கூடம் அமைத்தலைக் காட்டுபவை.

பாடலில் உள்ள காட்சிகளைப் பேராசிரியர் முதலியார் மாணாக்கர் மனத்தின் முன் நிறுத்தினது மிக அற்புதமாக இருந்தது உயர்நிலைப் பள்ளியில் ஜம்புலிங்கக் குருக்கள்போல் பாடல்களைப் பலமுறை இசையூட்டிப் படித்திருப்பாரேயானால் காண்டவவன தகனமே கற்பனையில் வகுப்பிற்குமுன் வந்திருக்கும். என்ன செய்வது? பேராசிரியருக்கு அத்தகைய குரல் அமையவில்லை.

கதையைச் சுருக்கமாகக் கூறி வகுப்பையே பாவனை ஆற்றல் மூலம் காண்டவ வனத்தினருகில் இட்டுச் சென்று விடுவார். தீயை மழை அணைக்காமல் குழுமுவெங்கணையால் கொற்றவான் கவிகை கொடுத்தல். குடையில் வீழும் நீர் சிறிதும் குடைக்குள் கசியாமல் பக்கங்களில் வழிதல், பொன் குடைக்கு முத்து மாலைகள் அமைந்தனபோல் காணப்பெறுதல், அக்கினி கொழுந்து விட்டெரிதல், பார்த்தன் அமைத்த சரக்கூடத்திற்குப் பவளத் தூண்கள் அமைத்தாற்போல் காணப்பெறுதல், மழை தாரைதாரையாகப் பொழிதல், நான்முகன் படைத்த அண்டத்திற்கு இந்திரன் பளிங்கால் அமைத்த பல்லாயிரங் கோடி தூண்கள்போல் காணப்பெறுதல் ஆகிய காட்சிகளை மானசீகமாகக் காணச் செய்து மாணாக்கர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார்.

பாடல்களை இசையூட்டிப் படித்திருப்பாரேயானால் - இல்லை. பாடியிருப்பாரேயானால் - காண்டவவன தகனமே வகுப்பிற்கு வந்திருக்கும்; அல்லது வகுப்பே சுற்றுலா செல்வதுபோல் மானசீகமாகக் காண்டவவன தகனம் நடைபெற்ற களத்திற்கே சென்றடைந்திருக்கும். அழகாக அமைக்கப்பெற்ற நாட்டிய அரங்கொன்றில் உறுப்பு நலன்கள் அமையப்பெற்ற நாட்டிய நங்கையொருத்தி அழகிய கோலம் புனைந்து ஆடினால் காண்போர் கருத்தில் அக்காட்சி ஆழப் பதியும். காண்போருக்கு நாட்டிய இலக்கணம், தாளம் முதலியன தெரிய வேண்டிய கட்டாயம் இல்லை. இங்கு "ரசனை'(சுவை)தான் முக்கியம். மைசூர் பாகையோ,