பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நீங்காத நினைவுகள்

ஜாங்கிரியையோ சுவைப்பதற்கு அவற்றைச் செய்யும் முறை, தெரிந்திருக்க வேண்டுமா? என்ன? அதுபோல் என்க. பாட்டை பாடும் போது கேட்போருக்கு ஒசைநயம் யாப்பு முறை முதலியவை தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தக் காட்சிகளைக் காண்பதற்கு வகுப்பில் அமைதி நிலவுதல் இன்றியமையாதது இசையுடன் பாடினால் அமைதி தானாக நிலவும். ஆனால் இஃது இல்லாமல் பேராசிரியரின் மந்திர ஆற்றலால் அமைதி நிலவும். ஒரு குண்டுசி விழுந்தால் கூட அதன் ஒலி கேட்கும் அளவிற்குத் தமிழ் வகுப்பில் அமைதியை நிலைநாட்டுவார். பாடற் பகுதியிலுள்ள வடமொழிச் சொற்களின் பொருளைப் பல முறை விளக்கிக் கூறி மனத்தில் அவற்றை பசுமரத்தாணியெனப் பதியச் செய்துவிடுவார்.

நினைவு - 3 : கட்டுரை எழுதுதல் தமிழ் கற்பித்தலில் முக்கியமான ஒரு கூறு பேராசிரியர் இதனைக் கற்பித்தல் அவருக்கே உரிய தனிப்பானியாக அமைந்திருந்தது. இந்த வகுப்பு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும். பெரும்பாலும் இந்த வகுப்பு பிற்பகலில்தான் அமைக்கப் பெற்றிருக்கும். இந்தக் கட்டுரைகள் துணைப்பாட நூல்களிலும் அமையும் பொதுத் தலைப்புகளில் எழுதவேண்டியும் இருக்கும். இன்னவகைக் கட்டுரைதான் எழுதவேண்டும் என்பதைப் பேராசிரியர் முதலியார் அவர்களே வரையறை செய்வார். தலைப்பை உறுதி செய்து கொண்டு கட்டுரைப் பொருளை வகை செய்து காட்டுவார். முன்னுரை, கட்டுரை உடல் (பல பகுதிகள்), முடிவுரை என்று வகுத்துக்காட்டி, ஒவ்வொரு தலைப்பிலும் என்ன எழுதவேண்டும் என்று மனத்தில் ஆணித்தரமாகப் பதியும்படி விளக்குவார். அரைமணி நேரம் இவ்விளக்கம் நடைபெறும். பிறகு எல்லோரும் "லாலி மண்டபம்" (Lawly Hall) என்ற இடத்திற்குச் சென்று எழுதவேண்டும். எழுதுவதற்கு வேண்டிய தாள்கள் மேசைமீது வரிசையாக வினியோகித்து வைத்துக் கொண்டு திரு. கிருட்டிணசாமி அய்யங்கார் காத்துக் கொண்டு இருப்பார் ஐந்து அல்லது ஆறு பக்கங்களில்