பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. நடேச முதலியார் 63

அழகிய முறையில் எழுத வேண்டும் ஒன்றரை மணிநேரம் இருப்பதால் பொருளை நன்கு நிரல்பட அமைத்து நிறுத்தி எழுதலாம். அழகான முறையில் இங்ங்னம் தரப்பெற்ற பயிற்சியை நன்முறையில் பயன்படுத்திக் கொண்டதால் இன்றும் மணிமணியாக முத்துக் கோத்தாற்போல் அழகாக எழுத முடிகின்றது.

நினைவு 4 : என்னுடைய எல்லா நலன்களுக்கும் காரணராக இருந்த திரு. முதலியார் அவர்கள் இன்றும் அடிக்கடி நினைவிற்கு வருகின்றார் கட்டுரைப் பயிற்சிகள் தருவதில் கல்லூரிப் பேராசிரியர்களுள் இவர் அத்திபூத்தமாதிரி. இவர் தந்த பயிற்சியே என்னை எழுத்துப் பணியில் வாழ்வித்துக் கொண்டுள்ளது. இதனை நினைவுகூரும் வகையில் அண்மையில் வெளியிட்ட (ஸ்டார் பிரசுரம், 72. பெரிய தெரு. திருவல்லிக்கேணி, சென்னை-600 005 தொ.பே 844740 பாட்டுத்திறன்" என்ற திறனாய்வு நூலை, திசம்பர் - 1988),

நற்றவர் பராவும் சிவத்தையே பேணும்

நலத்தினர்; செந்தமிழ் உயர உற்ற சஞ்சீவி அளித்தவர் தமிழின்

ஒளியினை எனக்கருள் சீலர்; கற்றவர் வியக்கும் புலமையே வடிவாம்

கண்ணியர், திண்ணிய உளத்தர்; கொற்றமார் நடேச முதலியார் அன்பிற்

குலாவுக இத்திரு நூலே

என்ற பாடலிலின்மூலம் அன்புப் படையலாக்கிப் பேராசிரியர் அவர்களை நீங்காத நினைவாக என் உள்ளத்தில் நிலைத்த இடத்தை நல்கி மகிழ்கின்றேன். புளகாங்கிதம் கொள்ளுகின்றேன். இந்த நூலின் படியொன்றினை டாக்டர் சஞ்சீவியின் கையில் செல்வதற்குமுன் அவர் திருநாடு அலங்கரித்து விட்டார்

பேராசிரியரைப் பார்க்கப் போகும் போதெல்லாம் தாயுமானப் பெருமானை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததனால் அவர்