பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

தலைமையாசிரியர் V. சொக்கலிங்கம் பிள்ளை

குலன்அருள் தெய்வம் கொள்கை மேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் உலகியல் அறிவோடு உயர்குணம் இணையவும் அமைபவன் நூல்உரை ஆசிரி யன்னே

என்ற நன்னூல் நூற்பா ஆசிரியரின் இலக்கணத்தைக் கூறுவது. ஆசிரியரிடம் உயர்குடிப் பிறப்பு. சீவகாருண்யம், இறைவழிபாடு, பெருந்தகைமை, நூல்களில் நல்ல தேர்ச்சி, மாணாக்கர் எளிதில் உணரும்படி தொகுத்துச் சொல்லுகின்ற கற்பிக்கும் திறன், நிலம்,மலை நிறைகோல், மலர் இவற்றை ஒக்கின்ற குணங்கள் உலக நடையையொட்டிய அறிவு இவை போன்ற பிற உயர்ந்த குணங்கள். இவை அமைந்திருக்கப்பெற்றவரே நூலைக் கற்பிக்கும் ஆசிரியராகத் தக்கவர் என்பது பவணந்தியாரின் கருத்து.

நிலம் - காணுதற்கரிய உருவப் பரப்பின் பெருமை, பெரிய பாரம் ஏற்றினாலும் கலங்காத வலிமை, தோண்டுதல் முதலிய குற்றங்களைச் செய்தாலும் பொறுக்கின்ற தன்மை, தக்க பருவத்தில் உழவர் செய்கின்ற முயற்சி அளவிற்குத் தகுதியாகப் பயன் தருதல் - ஆகியவை நல்ல நிலத்தினிடத்துப் பொருந்திய குணங்களாகும். ஆசிரியர் பிறரால் வகுத்தறியப் படாத கல்வியறிவின் பெருமை, பெரிய வாதம் செய்து தன்மேல் நெருங்கினவரால் கலங்காத

1 நன்னுல் - 26

5