பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நீங்காத நினைவுகள்

வலிமை, பிறர் தன்னை இகழ்தல்,முதலிய குற்றங்களைப் புரியினும் பொறுக்குந் தன்மை மாணாக்கர் செய்யும் முயற்சியளவிற்குத் தக அவர்க்குப் பயனைத் தருதல் - இவை ஆசிரியரிடத்துப் பொருந்தும் குணங்கள் ஆகவே நிலம் ஆசிரியருக்கு உவமையாயிற்று.

மலை அளவு செய்தற்கு அரிய வடிவத்தின் அளவு, பலவகைப் பொருள்களை உடைமை, வலிமையுடையவர்களாலும் அசைக்கப்படாத உருவத்தின் நிலைமை, தொலைவிலுள்ளார்க்கும் காணப்படுகின்ற உயர்ச்சி, மாரி வளங்குன்றினும், நீர் வளத்தைத் தருகின்ற வள்ளண்மையும் மலைக்குரிய நற்குணங்கள். ஆசிரியர் - அளவு காணக் கூடாத கல்வியின் அளவு, பலவகை நூற்பொருள்கள், புலமையுடையோராலும் அசைக்கப்படாத கல்வியறிவின் நிலை, நெடுந்தொலைவிலுள்ளாராலும் அறியப்படும் உயர்ச்சி, பொருள் வருவழி வறந்தாலும் தன்னைச் சார்ந்த மாணாக்கர்க்குக் கல்விப் பொருளைத் தரும் கொடை ஆகியவை ஆசிரியர்க்குரிய குணங்களாதலால் மலை ஆசிரியருக்கு உவமை ஆயிற்று.

நிறைகோல் தராசு நிறுக்கப்பட்ட பொருளை ஐயந்தீர உணர்த்தல், உண்மைபெறுவதற்கு இரண்டு தட்டுக்கும் நடுவே ஒருபால் கோடாமல் நிற்றல் - ஆகியவை தராசின் நற்குணங்கள், ஆசிரியர் : சொற்பொருளின் இயல்பை ஐயந்தீர அறிவித்தல் புலவர் இருவர் மாறுபட்டாராயின் உண்மை பெறத்தான் அவ்விருவர்க்கும் நடுவே ஒருபால் கோடாது நிற்றல் ஆகியவை ஆசிரியரது குற்றங்களாக அமைதலால் நிறைகோல் ஆசிரியர்க்கு உவமையாக அமைந்தது.

மலர் - சுபகாரியங்கட்கு இன்றியமையாது இருத்தல், கண்டாரெல்லாம் விரும்பித் தன்னைச் சூடிக் கொள்ளல், மென்மைக் குணமுடையதாய் இருத்தல், மலர்தற்குரிய காலத்தில் முக மலர்ச்சியுடைமை - பூவின் குணங்கள். ஆசிரியர் - சுபகாரியத்திற்கு இன்றியமையாதவராக இருத்தல், கண்டாரெல்லாரும் தம்மை விரும்பி வைத்துக் கொள்ளல், மென்மைக் குணமுடையவரா யிருத்தல், பாடம் சொல்லும் போது முகமலர்ச்சியுடையவராயிருத்தல் ஆகியவை ஆசிரியர் குணமாதலால் மலர் அவருக்கு உவமையாய் அமைந்தது