பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நீங்காத நினைவுகள்

என்ற அதிவீரராமபாண்டியரின் அமுதவாக்கின்படியொழுகி கடுமையாக உழைத்துப் படிப்படியாக முன்னேற்றம் அடைந்தவர்கள். ஏழை பங்காளராக இருக்கவேண்டும் என்ற குறிக்கோளைக் கடைப்பிடித்து வாழ்ந்தோம். நான் பயிற்சி பெறும் ஆசிரியர்களை உயர்நிலைப் பள்ளிகட்கு இட்டுச் செல்லும் போதெல்லாம் சொக்கலி ங்கம் பிள்ளை பூ அமிர்தலிங்கம் தமிழாசிரியர் குமாரவேலு (தமிழாசிரியர் இவர்களுடன் உரையாடித் திரும்புவதுண்டு. உரையாடல், இலக்கியம்பற்றியும், கவிதை, இலக்கணம் கற்பித்தல் பற்றிதான் இருக்கும்.

கணநாதன் என்ற சிறுவன் சிறு வயதில் பர்மாவிலிருந்து நடையாக வந்தவன். மாமன் வீட்டில் வளர்ந்தவன். மாமன் ஆறுமுகம் பிள்ளை என்பவர் அழகப்பா பயிற்சிக் கல்லூரியில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இந்தச் சிறுவனை நகராண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார் ஆறுமுகம் பிள்ளை. சாதிச் சலுகை மூலம் சொக்கலிங்கம் பிள்ளையவர்களின் உதவியால் அரைக் கட்டணச் சலுகை பெற முடிந்தது. மீதி அரைக் கட்டணத்தை நான் கட்டி உதவினேன். சொக்கலிங்கம் பிள்ளையும் நானும் கணநாதன்மீது தனிக்கவனம் செலுத்தினோம். கனநாதனும் பள்ளியிறுதித் தேர்வில் வெற்றி பெற்றான்.

பல்வேறு சாணக்கியங்கள் செய்து. சா.க. மூலம் கம்பன் அடிப்பொடி மாதிரி உயர்நிலைப் பள்ளி அறிவியல் துறை உதவியாளராகவும் ரூ. 28/= ஊதியத்தில்), பின்னர் தட்டச்சு இரு தேர்வுகளிலும் வெற்றியடைந்ததும், பயிற்சிக்கல்லூரி அலுவலக தட்டச்சு செய்வோராகவும் (ரூ. 150/= ஊதியத்தில் சேர்த்து அவனுக்குச் சரியான வாழ்க்கை அமைக்க 'பகீரதப் பிரயத்தனம்' செய்ய வேண்டியிருந்தது. நானும் சொக்கலிங்கம் பிள்ளையும் இதில் பெருமகிழ்ச்சி அடைந்தோம். நாங்கள் சொற்படி நடந்து, கடுமையாக உழைத்ததாலும் நல்லோர் கூட்டுறவாலும் கணநாதன் வாழ்க்கை சிறப்புற அமைந்தது.