பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நீங்காத நினைவுகள்

இது. சொக்கலிங்கம் பிள்ளையும் சீட்டுப் போட்ட வகையில் ரூ 2000/- அவரிடம் நிலுவையாக வைத்திருந்தார்; அதற்கும் வட்டி 9 சதவிகிதம் தருவதாக ஒப்பந்தம் செட்டியாரிடம் உரையாடுவதே ஒரு தனிச் சுவை. முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளையெல்லாம். நினைவிற்குக் கொணர்வார். இப்படி எத்தனையோ சுவையான அநுபவ நிகழ்ச்சிகள். சொக்கலிங்கம் பிள்ளையும் நானும் ஒத்த மனமுடையவர்கள் இருவரும் அவரிடம் ரூ 2000/- வீதம் இழந்தோம். மென்மைக் குணம் உடையவர்கட்கு வட்டித் தொழில் பொருந்தாதது. நெஞ்சைக் கல்லாக வைத்துக் கொள்பவர்கட்கே ஏற்ற தொழில் இது.

நினைவு - 4 : சொக்கலிங்கம் பிள்ளை தற்காலிகத் தலைமையாசிரியராக இருந்த போது இவரும் அறியாமல் ஒரு தவறு" நிகழ்ந்து விட்டது. பொறுப்பில்லாத ஒரு செயலுக்கு இவர் பொறுப்பிாளியாக இருக்க நேர்ந்தது. சிறப்புக் கட்டணத்தில் சேரும் தொகையைச் செலவிடும் பொறுப்பு தலைமையாசிரியருடையது. சொக்கலிங்கம் பிள்ளைக்குத் தெரியாமல் நகராண்மைக் கழக ஆணையர் அவர் இச்சைப்படி செவிப்புலக் கட்புலக் கருவிகள் வாங்கி அதற்குரிய தொகையை வாங்கப் பெற்ற கம்பெனியாருக்கு அனுப்புமாறு ஆணைப் பிறப்பித்து விட்டார். அதிகாரம் அவருக்கு இல்லையானாலும் "தகாத" காரியத்தை செய்துவிட்டார். ஒரு குறிப்பிட்ட கம்பெனியில் உற்பத்தி செய்யப் பெற்றவைதாம் வாங்கவேண்டும் என்பது கல்வி இயக்குநரின் சுற்றறிக்கைக் கடிதம் நகராண்மைக் கழக ஆணையர் அவர் இச்சைப்படி வேறொரு கம்பெனியார் உற்பத்தி செய்த கருவிகளை வாங்கிவிட்டார். இது தவறு. மேல்மட்டத்தில் இருப்பவர்கள் இவ்வாறு தவறிழைத்து தமக்கு கீழ்நிலையிருப்பவர்களை பலிகடாக்குவது அரசு நியதிபோல் நடைபெறுவது காலத்தின் கோலம். இதனால் நகராண்மை ஆணையருக்குக் கம்பெனியார் ஏதாவது சன்மானம் வழங்கியிருக்க வேண்டும். பாவம், சொக்கலிங்கம் பிள்ளை என்ன செய்வார்? "மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், வாயும் பேசாமல், எதிர்ப்பும் தெரிவிக்காமல்" தொகையை அனுப்பி விட்டார்.