பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நீங்காத நினைவுகள்

மூன்று திங்களில் கட்ட வேண்டிய 12 ஆயிரத்தில் 9 ஆயிரம் தள்ளுபடி செய்யப் பெற்றது. 3 ஆயிரம் ரூபாய் ஒலி பெருக்கி செட் வாங்கியது கட்ட வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப் பெற்றிருந்தது ஒரு மாதம் ஆறப்போட்டு இக்கடிதத்திற்கும் சரியான மறுமொழி தரப்பெற்றது பழைய பல்லவியே புதிய முறையில் சென்றது மற்றும் மூன்று மாதத்தில் இத்தொகையும் தள்ளுபடி செய்யப் பெற்றது சொக்கலிங்கம் பிள்ளையின் கவலை ஒழிந்தது. புதிய தெம்புடன் திகழ்ந்தார். இப்படிச் சிலருக்கு எதிர்பாராத தொல்லைகள் தோன்றுகின்றன.

நினைவு 5 : இரண்டு ஆண்டுகள் கழிந்து (1956 என நினைக்கிறேன். இவர் வாழ்வில் மீண்டும் ஒரு புயல் எழுந்தது. பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்னர் இவரை விட்டுப் பிரிந்து சென்ற இவர் மனைவி ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இவர் மனைவியின் தந்தையார் செட்டி வீட்டுக் கணக்குப்பிள்ளை. நீதிமன்ற வழக்குகளை நன்கு அறிந்தவர். மருமகனிடம் சுரப்பு இருக்கிறதென்பதை நன்கு அறிந்து கொஞ்சம் கறந்து பார்க்கலாம் என்பது அவரது நினைப்பு நோட்டீஸ் கண்டதும் சொக்கலிங்கம் பிள்ஸ்ள பதறிப் போனார்.

இவரை மணந்து கொண்டபோது கட்டில், மெத்தை, பீரோ, மேசை, நாற்காலி முதலியவை கொண்டு வந்ததாகவும், அவை இவர்பொறுப்பில் இருப்பதாகவும், முப்பது சவரன் மதிப்புள்ள நகை வகையறா இவர் வசத்திலிருப்பதாகவும். இவற்றைத் தம் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும். இவை தவிர, திங்களொன்றுக்கு வாழ்க்கைப்படியாக (Maintenance) ரூ. 150/= தரவேண்டும் என்றும், தவறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இவற்றைப் பெற நடவடிக்கைகள் எடுக்கப் போவதாகவும் நோட்டிஸில் குறிப்பிடப் பெற்றிருந்தது. தம் தம்பி வீட்டில் உணவு கொண்டு அமைதியாகப் பள்ளிப் பணியில் ஈடுபட்டு வாழ்ந்து வரும் தம் துறவு வாழ்க்கையில் ஒரு புயல் எழுந்தது போன்ற அச்சம் கிளர்ந்தெழுந்தது இவரிடம், நோட்டிசை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தார்; இதில் எப்படியாவது தமக்கு உதவவேண்டும் என்று வேண்டினார்.