பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நீங்காத நினைவுகள்

நினைவு - 6 : இதன் பிறகு சொக்கலிங்கம் பிள்ளை தம் மனைவியுடன் வாழ்ந்தபோது நேரிட்ட பல திடுக்கிடும் செய்திகளைச் சொன்னார் தம் மாமனார் தம் மகளைக் கொண்டு வசிய மருந்தை உண்ணச் செய்தாராம். மந்திரவாதியைக் கொண்டு பில்லி சூனியம் வைத்தாராம். இவற்றால் தம் உடல்நலம் மிகவும் சீரழிந்து பணிசெய்யும் திறன் இல்லாதும் போயிற்றாம். உடனே தம் வீட்டார் வேறொரு மந்திரவாதியைக் கொண்டு இந்தச் செய்தியை அறிந்தார்களாம். அவரைக் கொண்டு மாவினால் ஒரு பதுமை செய்வித்து அதில் பல ஊசிகளைக் குத்தினார்களாம். ஒவ்வொரு ஊசி குத்தப்படும்போதும் இவர் வயிற்றிலிருந்த மருந்து சிறிது சிறிதாக வெளிப்பட்டதாம். இன்னும் என்னென்னவோ செய்ததாகவும் சொன்னார். அவற்றை இப்போது நினைவுகூர முடியவில்லை. இரண்டாண்டுகளில் உடல்நிலை சீர் அடைந்ததாம். இக்கதை எனக்கு "அரபு இரவுகள்" நூலில் படித்த கதைகள் போலிருந்தது. இப்படியும் ஓர் அரக்கத் தன்மையுள்ள மாமனார் இருப்பாரா என்ற வியப்பும் திகைப்பும் எழுகின்றன.

நான் காரைக்குடி வந்ததும் (1950) அவரைக் காணும்போது அவரிடம் சிறிது மாற்றம் காணப்பட்டது. 1940-41 இல் சைதையில் அவரிடம் கண்ட் உற்சாகம், சிரித்த முகத்துடன் பேசுவது போன்றவற்றில் சிறிது மாற்றம் காணப்பெற்றது. சற்று வயது முதிர்ந்தமையால் இம்மாற்றம் இருக்குமோ என்று நினைத்து வாளா இருந்துவிட்டேன். குடும்ப வாழ்க்கை சரியாக அமையாததற்குக் காரணம் வினவினேன். மனைவியுடன் மனம் ஒத்து வாழமுடியவில்லை என்று மட்டிலும் சொன்னார். அதற்குமேல் நானும் குடைந்து கேட்கவில்லை. இப்போதுதான் கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதுபோல் உண்மைக் காரணம் விசுவரூபம் போல் தெளிவாகப் புலனாயிற்று.

நினைவு - 7 : தமிழகத்தில் எந்தப் பல்கலைக்கழகத்திலும் Ph.D. பட்டத்திற்குப் பதிவு செய்து கொள்ள விதிகள் தடையாக இருந்தமையால் திருப்பதி சென்றேன். நான்கு ஆண்டுகள் முயன்றும்