பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நீங்காத நினைவுகள்

ஆனால் சொக்கலிங்கம் பிள்ளை வீடு இருக்கும் இடம் தெரியாது. ஒரு சமயம் நானும் ஆறுமுகம் பிள்ளையும் பயிற்சிக் கல்லூரி உதவி ஆள் வீட்டைத் திறந்து பார்த்து வீட்டின் நிலையைத் தெரிந்து கொண்டு திரும்பும்போது 1972 வழியில் சொக்கலிங்கம் பிள்ளையின் வீட்டைக் காட்டினார் ஆறுமுகம் பிள்ளை அப்போது சொக்கலி ங்கம் பிள்ளை ஓய்வு பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார் அப்போது முற்பகல் 10 மணி இருக்கும். தெருவில் ஒருவர் வண்டியில் ஆப்பில் பழம் விற்றுக் கொண்டிருந்தார். ஓர் ஆறு பழங்கள் வாங்கிக் கொண்டு அவரைப் பார்க்கச் சென்றேன். தளர்ந்த நிலையில் காணப்பட்டார் உடல் நிலையும் குன்றியிருந்தது. "மலங் கழிக்க முடியவில்லை - இதுதான் பெருங் குறை" என்றார். இராஜாஜி போல் நிரந்தரமாக குடல் கழுவும் கருவி (Enema) வைத்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறினேன். முகத்தில் சோகக் களை தட்டியிருந்தது. சிரமப்பட்டுப் புன்முறுவலை ஏறிட்டுக் கொண்டு பேசியதால் இது புலனாயிற்று. 15 மணித்துளிகள் உரையாடித் திரும்பினேன். ஆறு திங்கள் கழித்து காரைக்குடி சென்றபோது அவர் திருநாடு அலங்கரித்த செய்தியை அறிந்தேன்

நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்து இவ்வுலகு

என்ற குறள் நினைவுற்கு வந்து நிலையாமை உணர்வால் சிறிது நேரம் தம்பித்துப் போனேன் இறக்கின்றவர்கள் கியு வரிசையில் நின்று கொண்டு இருப்பது போன்ற காட்சி என் மனத்தில் தோன்றியது. ஆனால் நான் நிற்கும் இடம் தெரியவில்லை

இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவதும் இல்லை'

என்று மாடல மறையோன் செங்குட்டுவனுக்கு உணர்த்திய பொன்மொழி என்னை ஆட்கொண்டது

7 குறள் - 336 8 சிலம்பு வஞ்சிக்காண்டம் - நடுகல் அடி 181-2