பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நீங்காத நினைவுகள்

நினைவு 3 : "ஞானியார் மரபில் பிறந்து வளர்ந்து மேற்கல்வி பயின்ற எனக்கு இறைவன் திருவுள்ளப்படி ஆசிரியர் பணி என் வாழ்க்கைத் தொழிலாக அமைந்தது: கீதையின் கருத்துப்படி சுதர்மமாகவும் அமைந்தது. 1941-ஜூன் முதல் நாள் பெருநிலக்கிழவர் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணி ஏற்றேன். கீதாசாரியன் ஆணைப் படி இதனையே என் சுதர்மமாகப் போற்றி வேறு பணிக்கு மாற்றிக் கொள்ளாமல் "பத்தினித்தனத்துடன்" இருந்து ஓய்வு பெற்றேன்:

புதிதாகத் தொடங்கப் பெற்ற நடுநிலைப் பள்ளியின் மேலாளராகத் திரு விசய வேங்கடாசல துரை நடுத்துரையும், தாளாளராகத் திரு முத்து வேங்கடாசல துரையும் (சின்னதுரை) இருந்து வந்தனர் இருவரும் பி.ஏ., பி.எல். படித்த வழக்குரைஞர்கள். இவர்கள் தாம் மேற்கொண்ட தொழிலுக்கு - அலங்கார புருஷர்களாக எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போய் வருகின்றார் என்ற உலகப் பழமொழிக்கு எடுத்துக்காட்டுகளாக - இயங்கி வந்தவர்களாக என் சிற்றறிவுக்குப் புலனாயிற்று. ஏதாவது ஒன்றிரண்டு புரோ நோட்டு வழக்குகளைக் கையாண்டிருக்கலாம் இவர்தம் தந்தையார் பெருநிலக் கிழவரின் ஒளி மங்கிக் கிடந்தாலும், இவர்கள் பெருநிலக் கிழவரின் மக்கள்" என்ற ஒளியால் சமூகத்தில் ஓரளவு மதிப்புடன் திகழ்ந்து வந்தனர் என்று சொல்லாம். தொழிலில் இவர்கள் இருவருக்கும் எந்தவித முன்னேற்றமும் இல்லை; கணிசமான அளவுக்கு வருவாயும் இல்லை இருவருமே "நாணயத்திற்குப் பேர் போனவர்கள் என்று சமூகத்தினரால் போற்றப் பெற்றனர் என்பதற்கு எள்ளளவும் ஐயம் இல்லை

இவர்கள் தலைமையில் யான் பணியாற்றி வந்தபோது எனக்குப் பாஞ்சாலங் குறிச்சி வீரபாண்டியன் கட்டபொம்மன், ஊமைத்துரை என்ற இருவர் பெயர்களும் நினைவிற்கு வந்தன கட்டபொம்மன் செந்நிற மேனியையுடையவராதலால் "சிவத்தய்யா"

2 திருப்பதி திரு வேங்கடவன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்

துறைத் - தலைவர் - பதவியிலிருந்து (1977)