பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நீங்காத நினைவுகள்

பற்றுச்சீட்டுகளில் மறைந்து நிர்வாகத்தினர் கையில் மூலதனமாயிற்று அந்தக் காலத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளின் நிர்வாகம் ஆசிரியப் பெருமக்களின் குருதியை அட்டைபோல் உறிஞ்சிக் கொண்டிருந்தது இந்தப் பெரிய குற்றத்திற்கு அடியேன் ஒரு கைப் பாவையாகப் பயன்படுத்தப் பெற்றேன்.

இந்தப் பாவங்கள் செய்ததற்காகத்தான் திருவேங்கடாசலபதி என்னைத் திருத்திப் பணிகொண்டு என்னைப் பல்லாண்டுகள் எந்தவித சொந்த முன்னேற்றமும் இல்லாமல் கசக்கிப் பிழிந்தான் போலும்

தெரியேன் பால கனாய்

பலதீமைகள் செய்து விட்டேன்;

பெரியேன் ஆயினபின்

பிறர்க்கேயுழைத்து ஏழையானேன்.”

என்று மனம் நொந்து அழுகின்றேன். என்றாலும் இந்தத் தெய்வப் பணியில், துறையூரில் எண்ணற்ற ஏழைப் பிள்ளைகட்கு உதவி செய்ய வாய்ப்பிருந்தது திருப்பதியிலும் தமிழ் வளர்ச்சிக்குக் கருவியாகப் பயன்பட்டேன். 'பைந்தமிழ்ப் பின்சென்ற பகங்கொண்டல் இப்படியெல்லாம் என்னை ஆட்டிப் படைத்ததை எண்ணி இறும்பூது அடைக்கின்றேன். செம்மாத்து நிற்கின்றேன். மனமும்,

தொண்டே செய்து என்றும்

தொழுது வழியொழுகப் பண்டே பரமன்

பணித்த பணிவகையே"

என்று நம்மாழ்வாரின் திருவாக்கை நினைந்து அமைதி பெறுகின்றது

நினைவு 4 : அல்லும் பகலும் பள்ளி முன்னேற்றத்தையே கருத்தில்கொண்டு உழைக்கும் அடியேனைச் சிறிதும் கலக்காமல்

3 பெரி திரு 1.9 7 4 திருவாய் 10.4:5