பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8

 நலம்தான். ஆயினும் அதைவிட வாயில் எந்த வேளையில் உணவு சாப்பிட்ட போதிலும் உடனே வாயை நன்றாய் கழுவுதல் நலம்; அப் படி செய்யும்போது விரலினால் பல் இடுக்குகளை தேய்த்து கழுவினால் போதும். பற்களை துலக்குவதற்கு பலர் மேல் நாட்டில் இருந்துவரும் பாலினோஸ் முதலிய பேஸ்டுகளையும் விலை உயர்ந்த பல் தூள்களை யும் உபயோகிக்கின்றனர். இது அவசியம் இல்லை என்பது என்னு டைய அனுபவம். 30 வருடங்களுக்குமுன் மேல் நாட்டு பொருள் களேயே பல் துலக்க உபயோகித்து வந்தேன். அப்படி உபயோகித்தும் என் ஈறுகளினின்றும் இரத்தம் அடிக்கடி வரும், கடைசியாக அதை தடுப்பதற்கு எங்கள் வீட்டு பாட்டி ஒருத்தி சொன்ன வேலம் பட்டையை உபயோகிக்க ஆரம்பித்தேன். அது முதல் இதுவரையில் பற்களினின்றும் இரத்தம் வருவது நின்றுவிட்டது. காட்டில் சாதா ரணமாக் கிடைக்கும் கருவேலம் பட்டையை உலர்த்தி பொடியாக்கி கொஞ்சம் கரித் துளையும் உப்பையும் சேர்த்து உபயோகிப்பது மிகுந்த பலனை தருகிறது. அன்றியும் பணச் செலவும் மிகக் குறைவாம். ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பதை கவனிக்கவும்.

(4) தாகசாந்தி செய்யல்:-

பிராம்மணர்களுக்குள் ஒரு நல்ல வழக்கம் இருக்கிறது. அதாவது சாப்பாட்டை ஆரம்பிக்கும் முன் உள்ளங்கையில் கொஞ்சம் தீர்த்தத்தை (ஜலத்தை) ஏந்தி ஏதோ மந்திரத்தை சொல்லி அதை குடித்த பின்பே சாப்பிட ஆரம்பிக்கும் இந்த வழக்கம் ஒரு நல்ல வழக்கமாம், இதை மற்றவர்களும் பின்பற்று வது நல்லதாகும்; இதனால் உண்டாகும் நன்மை என்னவென்றால் தொண்டையில் வறட்சி ஏதாவது இருந்தால் நீங்கும், விக்கல் வராது. இது காரணம் பற்றியே ஹிந்துக்களெல்லாம் - முதலில் நெய் சேர்த்த உணவு உண்கிறார்கள். நெய்யானது தொண்டை வறட்சி நீக்கி பிறகு சுலபமாக உணவு போக வழி செய்கிறது.

இச்சந்தர்ப்பத்தில் நம்மவர்களிடம் இருக்கும் பழக்கத்தை கண்டித்து பேச வேண்டியவனாய் இருக்கிறேன். அதாவது உணவை அருந்தும் முன் சாப்பிட உட்கார்ந்தவுடனே பக்கத்தில் வைத்திருக்கும் ஒரு லோட்டா சுத்த ஜலத்தை 'நெட நெட' வென்று குடிப்பதாகும்.இது தேக ஆரோக்கியத்திற்கு நல்ல வழக்கம் அல்ல.இதனால் வயிற்றில் இருக்கும் ஜீரண சக்தியைக் கொடுக்கும் திரவங்கள் நீர்த்து போகின்றன. அதனால் ஜீரண சக்தியே குறைபடுகிறது.