பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

9

 நம்முடைய ஆயுர்வேத நூல் ஒன்றில் "சாதங்கள் எவ்வளவேனும் கொண்டபின் தாகம்தனை வாங்கலும்' என்று குறிப்பிட்டிருக்கிறது. ஆகவே சாப்பாட்டுக்கு இடையில் கூடிய மட்டும் தாகசாந்தி செய்து கொள்ளாமல் கடைசியில் ஒரே விசையாய் தாகத்திற்கு சாப்பிடுதல் தான் நல்ல மார்க்கம். இச்சந்தர்ப்பத்தில் மற்றொரு வைத்திய நூலில் கூறி இருக்கிறதை இதைப் படிக்கிறவர்களுக்கு நியாபகப்படுத்து கிறேன். அதாவது வயிற்றில் பாதி இடம் உணவிற்கும் கால் பங்கு ஜலத்திற்கும் மிகுந்த கால் பங்கு காற்றிற்கும் இடம் தரவேண்டும் என்பதாம். இதைவிட்டு மூக்கு பிடிக்க சாதத்தை சாப்பிடுவது பெரிய தவறாகும். சிறு வயதில் அப்படி சாப்பிடுகிறவர்கள் நடு வய திலேயே குன்ம நோய்க்கு ஆளாவார்கள் என்பதற்கு ஐயமில்லை. நாம் மற்றவர்கள் நிர்ப்பந்தனையினைலே அளவு மிஞ்சி அதிகமாய் புசித்துவிட்டால் அதற்கு சுலபமான ஒரு பரிகாரம் உண்டு. அதாவது மறு முறை நாம் உட்கொள்ள வேண்டிய உணவை தவிர்த்தலாகும். அன்றியும் உண்ட உணவு ஜீரணமாகாது. புளியேப்பம் வந்தால் ஒரு டம்ளர் வெந்நீரை உட்கொண்டு அதற்கப்புறம் கொள்ளவேண்டிய உணவையோ சிற்றுண்டியையோ உட்கொள்ளாதிருந்தால் எல்லாம் சரியாய்விடும்.


(5) உபவாசம்:-உணவைப் பற்றி எழுதும்பொழுது, உப வாசத்தைப் பற்றியும் நான் எழுத வேண்டியவனாயிருக்கிறேன். உப வாசம் என்றால் உண்ணாதிருத்தல் என்று அர்த்தமாம். தமிழர்கள் இதை சாதாரணமாக ஒருபொழுது என்பார்கள். இதற்கு அர்த் தம் என்னவென்றால் ஒரு நாளைக்கு ஒரு உணவைதான் கொள்ள வேண்டும். இரண்டாவது உணவை கொள்ளலாகாது என்பதாம். இதனால் உண்டாகும் பலன் என்னவென்றால் எந்நேரமும் இடைவிடாது செய்துகொண்டிருக்கும் நமது வயிற்றுக்கு பாதி நாளாவது ஓய்வு கொடுத்தல் ஆகும். அப்படி அதற்கு ஓய்வு கொடுத்தால் மறு நாள் அதன் வேலையை சுறுசுறுப்பாய் செய்யும். இந்த உண்மையை நம் மவர்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே அறிந்திருக்கிறார்கள். பிராம்மணர்களில் பெரும்பாலோர் அமாவாசை தினங்களிலும் இன் னும் மற்ற விரததினங்களிலும் ஒருபொழுது இருக்கிற வழக்கம் நமது தேசத்தில் உண்டு. பிராம்மணர்கள் அல்லாத திராவிடர்கள் மாதாந் திர கிருத்திகைகளிலும் முக்கிய நோன்பு தினங்களிலும் ஒருபொழுதை அனுஷ்டிப்பது வழக்கம். ஒருபொழுது இருப்பதென்றால் மறு நாள் 2