பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

13

 இல்லாதிருக்குமா?" என்று கேட்டதற்கு அவர் ' ஆனால் நான் ஒன்று சொல்கிறேன் கேள். இந்த காப்பி முதலியவைகளை குடிக்காதிருக்க முடியுமா உன்னால் " என்றார், அன்றை தினம் அவருக்கு நான் கொடுத்த உறுதிமொழியின்படி இப்பானங்களை ஒழித்திருக்கிறேன் இன்றளவும் என்றே கூற வேண்டும். அந்த வழக்கத்தை விட்ட பிறகு முன்பு அடிக்கடி வந்து என்னுடன் சகவாசம் செய்துகொண் டிருந்த கீல் வாயு என்னும் சிநேகிதன் என்ன அண்டிவருவதே இல்லை. ஆனாலும் மதுபானத்தை முற்றிலும் விலக்கியது போல் காபி குடிப் பதை அறவே ஒழிக்கவில்லை. எப்போதாவது தேநீர் விருந்து கூட் டங்களுக்கு போக வேண்டி இருந்தால் அங்கே காபி கட்டாயமாய் சாப்பிட வேண்டி யிருக்கிறது. அப்படிப்பட்ட சமயங்களில் அதை சாப்பிட்டதற்காக இரவில் பிராயச் சித்தம் செய்ய வேண்டியவனாயிருக் கிறேன். அதாவது இரவு 2 மணி வரையில் தூக்கம் வராமல் கஷ்டப் படுகிறேன், மேற்சொன்ன விஷயங்களில் தேநீரை குடிக்க வேண்டி வந்தாலே இரவெல்லாம் முக்கோடி ஏகாதசி விழிப்புத்தான் ! மேற் சொன்னது என் அனுபவமா யிருந்தபோதிலும் சிலர் காபி தேநீர் இவைகளை குடிப்பதனால் எங்களுக்கு தூக்கம் கெடுவதில்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு ஒரு உதாரணத்தை இங்கு எழுதுகிறேன். என்னுடைய நண்பர் ஒருவர் என் பெயரையே கொண்டவர்-ஜி. வி. சம்பந்தம் செட்டியார் என்பவர் ஒரு நாளைக்கு பத்து பன்னிரண்டு தரம் தேநீர் குடிக்கும் வழக்க முடையவரா யிருந் தார். ஒரு முறை அவரை இது என்ன ஐயா இப்படி தேத்தண்ணீர் சாப்பிடுகிறீரே. உங்களுக்கு தூக்கம் கெடுவதில்லையா ? என்று நான் கேட்டதற்கு அவர் அடியிற்கண்ட வேடிக்கையான பதில் உரைத்தார். " ஐ ஐயோ இதனால் தூக்கம் கெடுவதாவது எனக்கு எப்பொழுதா வது தூக்கம் சரியாக வராவிட்டால் இரண்டு கப் தேநீர் குடித்தால் உடனே தூக்கம் வந்து விடுகிறது ' ஆயினும் இப்படிப்பட்ட வழக்க முடையவர்கள் அபூர்வம் தான். வெகுவாய் ஜனங்கள் இந்த வழக்கத்தினால் தங்கள் தூக்கத்தை கெடுத்துக் கொள்ளுகிறார்கள் என்பதற்கு ஐயமில்லை. இங்கு எல்லா வைத்தியர்களும் இப்பானங்கள் கொஞ்சம் உற்சாகப்படுத்துகின்றனவே ஒழிய அவைகளில் உடலுக்கு பலம் தரும் பொருள் ஒன்றுமில்லை என்றே ஒப்புக்கொள்கிறார்கள். முக்கிய மாக ரத்த கொதிப்பு (Blood - Pressure) உள்ளவர்கள் இப்பானங் களை அருந்தக்கூடாது என்பது நிச்சயம். எனது சிநேகிதர்களுள்