பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14

 சிலர் பாரிச வாயுவினால் வைத்தியர்களுடைய கட்டளையை மீறி காபி தண்ணீரை குடித்து திடீரென்று மரித்து போனதை நான் பார்த்திருக் கிறேன். மேலும் க்ஷய வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த காபி, டீ முதலிய பானங்களை அருந்தலாகாது என்று பல பிரபல ஆங்கில வைத் தியர்கள் கூறியதைக் கேட்டிருக்கிறேன். நான் பல வருடங்களுக்கு முன் படித்த ஆங்கில சுகாதார ரூல் ஒன்றில் அடியில் கண்டபடி எழுதி யிருந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது . ஐந்து வருடங்கள் வரையில் குழந்தைகளுக்கு காபி, டீ கொடுக்கவே கூடாது அப்புறம் மிதமாய் சாப் பிடல் நலம். 50 வருடங்களுக்கு மேல் இப்பானங்களைக் குறைத்துக் கொள்வது நல்லதாகும். ஆகவே மொத்தத்தில் நீண்ட ஆயுளை விரும்பு பவர்கள் இவைகளை அருந்தாதிருந்தால் நலமாகும். இச்சந்தர்ப்பத் தில் இவைகளுக்கு பதிலாக நீ என்ன சாப்பிடுகிறாய் ' என்று எனது பல நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள். ஆகவே காபி, டீக்கு பதிலாக நான் என்ன சாப்பிடுகிறேன் என்பதை இதை வாசிக்கும் எனது நண்பர் களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். காப்பி சாப்பிடுவதை விட்ட பிறகு கோகோ, போஸ்டம், ஒவல்டின் முதலிய பானங்களே அருந்தி பார்த்தேன். எனக்கு திருப்திகரமாய் இல்லாது அவைகளை எல்லாம் விட்டு கடைசியாக ஒரு யுக்தி செய்து பார்த்தேன்-சுச்கு, மிளகு, திப்பிலி இவைகளை பொடி செய்து காபியை காய்ச்சுவதுபோல் அந்த பொடியைக் காச்சி வடிகட்டி பாலும் சர்க்கரையும் சேர்த்து சாப்பிட ஆரம்பித்தேன். இது எனக்கு மிகவும் திருப்திகரமாய் இருந்தது. இப்பானத்தையே கடந்த முப்பத்திரண்டு வருடங்களாக அருந்தி வருகிறேன். தமிழில் திரிகடுகம் என்று பழைய நூல் ஒன் நிருக்கிறது. எப்படி திரிகடுகம் என்று பெயர் பெற்ற சுக்கும், மிள கும், திப்பிலியும் உடலுக்கு நன்மையை செய்கிறதோ அவ்வாறே அந் நூல் மனித வாழ்க்கைக்கு நன்மையை தரும் என்று அந்நூலுக்கு அப்பெயர் வந்ததற்கு காரணம் அறிஞர்கள் கூறுகின்றனர். தினம் எத்தனை தரம் உணவு கொள்ள வேண்டியது :நமது நாட்டில் ஒரு பழமொழி யுண்டு. அதாவது 'ஒரு முறை உண் பான் யோகி, இரு முறை உண்டான் போகி, மும்முறை உண்பான் ரோகி' இதன் பிரகாரம் சாதாரணமாக நாம் ஒரு நாளைக்கு இரண்டு முறை நன்ருக புசித்தல்தான் சரி. அதற்குமேல் 3 முறை புசித்தல் நோய்க்கு இடங்கொடுத்தலாம். இக்கணக்கில் சிற்றுண்டி உள்ளாக வில்லை. சிற்றுண்டி என்பதற்கு பெயருக்கு தகுந்தவாறு சிறிய உண