பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16

 ஒருவன் சாப்பிடவேண்டிய உணவுப் பொருள்கள்:-ஆங் கிலத்தில் ஒரு பழமொழி உண்டு-அதாவது 40 வயதுக்கு மேற் பட்ட மனிதன் வைத்தியனாகவாவது இருக்கவேண்டும் அல்லது மடை யனாகவாவது இருக்கவேண்டும் ' என்பதாம். இதன் தாத்பர்யம் என்னவென்றால் 40 வயதுக்குள்ளாக ஒவ்வொரு மனிதனும் தன் உடற் கூற்றிற்கு இன்னின்ன பதார்த்தங்கள் ஒத்துக் கொள்கின்றன, இன்னின்ன ஒத்துக் கொள்ளவில்லை என்பது அவனுக்கு தெரியவேண் டும் என்பதாம், சாதாரணமாக 40 வயது வரையில் ஒருவன் எதை யும் புசிக்கலாம்-அளவுக்கு அதிகமாகாதபடி எதை புசித்தாலும் அதை செரிக்கும்படியான சக்தி அவன் உடலில் இருக்கிறது அது வரைக்கும், அன்றியும் எதையும் மிதமாகப் புசித்தல் நலம். உதா ரணமாக உருளைக் கிழங்கு நல்ல ருசியாகத்தானிருக்கிறது. ஆயினும் அதை தினமும் புசித்து வந்தால் கட்டாயமாய் வாய்வு உபத்திரவம் செய்யும். -


நம்முடைய ஆயுர்வேத சாஸ்திர பிரகாரம் மனிதர்களுடைய உடல் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது-பித்த உடம்பு, சிலேஷ்ம உடம்பு, வாய்வு உடம்பு இந்த ஒவ்வொரு உடம்பிற்கும் இன்ன உண வுப் பொருள்கள் ஆகாது என்று விவரமாய் பதார்த்த குண சிந்தா மணியில் கூறப்பட்டிருக்கிறது. ஆகவே ஒவ்வொருவனும் அதைப் படித்து பார்த்து அதில் சொல்லியபடி நடத்தல் நலம்.இந்த விவரங்களை யெல்லாம் நமது உணவுப் பொருள்களின் குணங்கள் என்னும் ஒரு சிறு புத்தகத்தில் நான் அச்சிட்டிருக்கிறேன். அதைத் தயவு செய்து பார்த்துகொள்ளவும் இங்கு ஆங்கில வைத்திய முறைப்படி ஒருவன் உண்ணும் உணவில் கட்டாயமாய் இருக்கவேண்டிய பொருள்கள் புரதனங்கள் (Protains) கார்போ ஹைட்ரேட்ஸ் அல்லது மாவுப் பொருள்கள், கொழுப்பு பதார்த்தங்கள், சாதாரணமாக புரதனங்கள் பருப்பு வகைகளிலும் பீன்ஸ் முதலிய கொட்டை தினுசுகளிலும் அதிக மாய் இருக்கின்றன. அரிசி முதலிய தானியங்களில் கார்போ ஹைட் ரேட்ஸ் அதிகமாயிருக்கிறது. பால், தயிர், மோர், நெய், எண்ணை முதலியவைகளில் கொழுப்பு சத்து அதிகமாயிருக்கிறது. இம்மூன்று பொருள்களும் தேக ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. தென் னிந்தியாவில் தமிழர்கள் உண்ணும் உணவில் ஒருவன் உடல் நலத் திற்கு வேண்டியபடி மேற்சொன்னவைகள் அடங்கியிருக்கின்றன.