பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

17

 அன்றியும் ஆங்கில வைத்தியர்கள் ஆராய்ச்சியின்படி ஒருவன் தேக நலத்திற்கு கட்டாயமாக விடமின்ஸ் (Vitamins) உட்கொள்ள வேண்டும். இந்த உயிர் சத்துக்கள் எந்தெந்த பதார்த்தங்களில் அதிக மாயிருக்கின்றன என்பதை பற்றியும் எனது மேற்குறித்த புத்தகத் தில் விவரமாய் எழுதியிருக்கிறேன் பார்த்துக்கொள்ளவும். இந்த உயிர் சத்துக்களில் முக்கியமானவை ஏ, பி, ஸி, டி என்று பிரிக்கப்பட் டிருக்கின்றன. உயிர் சத்து ஏ. கிடைக்கும் பொருள்கள் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், தக்காளிப் பழம், பப்பாளி, முருங்கைக் கீரை, பச்சைக் கீரைகள் முதலியன. பி. உயிர் சத்து கிடைக்கும் பொருள்கள்-கைகுத்தல் அசிசி, கோதுமை, கம்பு, கடலை, அவரை, கோஸ்முட்டை, கோஸ் பூ, தக்காளி, முள்ளங்கி, தேங்காய் முதலி யன. ஸி. உயிர் சத்து உள்ள பொருள்கள்-எலுமிச்சம் பழம் ரசம், முளைகட்டின துவரை, பச்சை காய்கறிகள், கிச்சிலிப் பழம், ஆரஞ்சி, தக்காளிப் பழம், முட்டை கோஸ், கோஸ்பூ, நெல்லிக்காய், கருவேப் பிலை, பச்சைக் கீரைகள் முதலியன. டி. உயிர் சத்து உள்ள பொருள் கள்-பால், சூரிய வெளிச்சம், காட்லிவர் ஆயில் முதலியன; மேற் சொன்னவைகளில் தேங்காய் தவிர மற்றவைகளையெல்லாம் நான் உப யோகித்து வருகிறேன். தேங்காய் புசிப்பதை சுமார் 30 வருடங் களுக்குமுன் நான் விட்டதற்கு காரணம் பிறகு நான் தெரிவிக்கிறேன். சாதாரணமாக நாம் உண்ணும் மிஷின் தீட்டிய அரியில் உள்ள உயிர் சத்துகளெல்லாம் போய்விடுகின்றன. ஆகவே கைகுத்தல் அரிசி யையே எனது சம்பந்தி டாக்டர் அப்பாதுரை முதலியார் அவர்கள் சொன்னபடி உபயோகித்து வருகிறேன். பச்சரிசி கொஞ்சம் வாய்வு செய்யும் என்பார்கள் ஆனால் புழங்கலரிசியைவிட அதற்கு பலம் தரும் சக்தி அதிகம். புழுங்கலரிசியில் பலம் தரும் பொருள் மிகவும் குறைவு. அன்றியும் அரிசியை சமைக்கும்போது வேண்டிய அளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிட்டு கஞ்சி தண்ணீரை வடிக்காமல் சாப்பிடுவதே நலம். கஞ்சி தண்ணீரை வடிப்பதினால் அரிசியில் உள்ள பல சத்து பொருள்கள் அழிந்து போகின்றன. காய்கறிகளையும் கீரைகளை யும் வேகவைக்கும்போது வேண்டிய அளவு தண்ணீர்தான் உபயோ கிக்க வேண்டும். அவைகளை வேக வைத்தவுடன் தண்ணீரை இருக்கா மல் அவைகளை சமைப்பது நலம்.தண்ணீரை இருப்பதினால் அவை களிலுள்ள சத்து பொருள்கள் அழிந்து போகின்றன, பாலையும் கொதி நன்றாக வரும்படியாய் காய்ச்சி பிறகு ஆரவைத்து புசிப்பதே 3. .