பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18

18 இலம்; அதிகமாய் காய்ச்சுவதினால் பாலிலுள்ள உயிர் சத்து பொருள் கள் அழிந்து போகின்றன. பாலில் பசும் பால்தான் நல்லது, எருமை பால் ஜீரணமாவது கஷ்டம். அன்றியும் வாய்வை உண்டு பண்ணும். பாலைவிட தயிர் சீக்கிரமாக ஜீரணமாகும். நன்றாக கடைந்த மோர் அதைவிட சீக்கிரமாக ஜீரணமாகும். வியாதியஸ்தர்கள் தங்களுக்கு சில உணவுப் பொருள்கள்தான் நல்லது மற்றும் சில கெடுதி பண்ணும் என்பதை கவனிப்பது அவசியம். இதைப் பற்றி பல விஷயங்கள் உணவு பொருள்களின் குணங்கள் என்கிற பெய ருடன் நான் அச்சிட்ட ஒரு சிறு புஸ்தகத்தில் கண்டுகொள்ளும்படி வேண்டுகிறேன். அவைகளையெல்லாம் பற்றி இங்கு எழுதுவதற்கு இடமில்லை.


மலஜலம் போக்குதல் :


தக்க வேளைகளில் உணவு கொள்ளுவது தேக ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தக்க வேளைகளில் மல ஜலம் போக்குதலுமாம். சென்ற நூற்றாண்டில் வசித்த பெயர் பெற்ற ஆங்கில வைத்தியராகிய சர். ஆயர் குராம்பி என்பவர் ' உலகில் மனி தரை பீடிக்கும் வியாதிகளில் நூற்றுக்கு எழுபத்தைந்து மலஜலம் சரியாக கழிக்காததினால் உண்டாவனவாம் ' என்று கூறியுள்ளார். நமது வைத்திய நூலில் ஒரு பாட்டில் இரண்டு அடக்கோம் ' என்று கூறி யுள்ளது. அதாவது மலஜலம் வெளிப்படுவதை நாம் தாமதப்படுத்தக் கூடாது என்று அர்த்தமாகும்.

சாதாரணமாக ஒருநாளைக்கு ஒரு முறையாவது தேக ஆரோக் கியத்தை விரும்பும் மனிதன் மலத்தை கழிக்க வேண்டும். இரண்டு முறை கழித்தால் இன்னும் மேலாகும். ஜெர்மனி தேசத்து வைத்தியராகிய"கூன்' என்பவர், இதுதான் மனிதனுக்கு இயற்கையான மார்க் கம். இரண்டு முறை நாம் பெரிய உணவு கொள்கிறதற்கு ஏற்றபடி இரண்டு முறை அவைகளை வெளிப்படுத்துதலும் நியாயமாம் என்று எழுதியுள்ளார். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மலத்தை விசர்ஜனம் செய்யாவிடில் மலச்சிக்கல் என்னும் வியாதி ஆரம்பமாகும். மலச்சிக் கல் நீடித்தால் மனிதனுக்கு ஆசன நோய், மூலவியாதி, பவுத்ரம் முதலிய வியாதிகள் உண்டாகும். இவைகள் மற்ற வியாதிகள் உண் டாக ஹேதுவாகின்றன. சாதாரணமாக ஜூரம் முதலிய எந்த வியாதி