பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

19

 வந்தாலும் நாம் அழைக்கும் வைத்தியர் கேட்கும் முதல் கேள்வி இன்றைக்கு மலபிரவர்த்தி ஆச்சுதா’ என்பது எல்லோரும் அறிந்த விஷயமே. பெங்களூரில் இருக்கும் டாக்டர். அப்பாதுரை முதலியார் அவர்கள் குழந்தைகளுக்கு ஜூரம் என்றால் ஒரு பாலாடை பாலில் இருபது துளி சித்தாமணக் கெண்ணையை கொடுத்து விட்டு அதனால் மலம் போய் ஜூரம் தணிகிறதா என்று பார்த்த பிறகே வேறு மருந்து கொடுப்பார். 80 வயதுக்கு மேல் உயிருடன் இருந்து பிறகு காலமான் எங்கள் குடும்ப வைத்தியராக 15 வருடங்களுக்கு மேல் இருந்த டாக்டர். ஹாலர் என்பவர் ஜூரத்திற்கு அவர் தயாரித்த வெள்ளி மாத்திரை கொடுப்பதன் முன் முதலில் மலம் கழிவதற்கு ஒரு பெள டர் சாப்பிட சொல்வார். அதிகமாய் சொல்வானேன். தலைநோய், வயிற்று நோய், முதலிய பல வியாதிகள் ஒரு முறை மலம் கழிந்த வுடன் தாமாகவே தணிந்து போகின்றன என்பது அநேக மனிதர்களு டைய அனுபவம் அல்லவா? ஆகவே நீடித்த நாள் தேக ஆரோக் கியத்துடன் வாழ வேண்டும் என்று விரும்பும் மனிதன் இதை முக்கிய மாக கவனிக்க வேண்டும். .


இனி இதைப்பற்றிய என்னுடைய சொந்த அனுபவத்தை எழுது கிறேன். என்னுடைய பதினேழாவது வயது வரையில் மலச்சிக் களுக்கு ஆளாயிருந்தேன். இரண்டு நாள் மூன்று நாளைக் கொருமுறை தான் வெளிக்கு போவேன். இதைப் பற்றி என் அண்ணன் மார்கள் என்னை ஏளனம் செய்வது வழக்கம், ஆயினும் இதற்கு சிகிச்சை எனக்கு ஒருவரும் சொல்லவில்லை. இதற்கு சிகிச்சை தேடாதது என் தவறுதான். இப்படி அஜாக்கிரதையாய் இருந்தபடியால் இது மூல வியாதிக்கு என்னைக் கொண்டுவந்து விட்டது. பிறகு நான் கண் விழித்து அக்காலத்தில் எங்கள் குடும்ப வைத்தியராயிருந்த டாக்டர். வரதப்ப நாயுடு என்ற பிரபல வைத்தியரிடம் போய் இதற்கு சிகிச்சை வேண்ட அவர் பின் வருமாறு கூறியது எனக்கு க்யாபகமிருக்கிறது " மிஸ்டர் சம்பந்தம் தற்கால சிகிச்சையாக இதோ மருந்து எழுதிக் கொடுத்திருக் கிறேன். ஆயினும் இந்த வியாதி மறுபடியும் வராமலிருப்பதற்கு நீங் கள் சாப்பிடும் உணவிலேயே பரிஹாரம் தேடவேண்டும். மலச்சிக் கலை உண்டுபண்ணும் பதார்த்தங்களை நீங்கள் புசித்தலாகாது, மலத்தை இளகச் செய்யும் பதார்த்தங்களையே அதிகமாய் புசிக்கவேண் டும். முக்கியமாக தினம் ஒரு கீரை வகையை சாப்பிட்டு வந்தால்