பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

21

 இரண்டு விதமான அபிப்பிராயம் கொள்கின்றனர். வைத்தியர்களே ஒரு சிறு வியாதிக்கு சிகிச்சையில் வேறுபட்ட மனதுடையவர்களா யிருந்தால் வியாத்யஸ்தர்கள் என்ன செய்வது, ஒவ்வொருவரும் தங்கள் சொந்த அனுபவத்தை கொண்டு எது தங்களுக்கு அனுசரனையாய் இருக்கிறதோ அதை கைப்பற்ற வேண்டியதுதான். நான் எப்பொழு தாவது காபி சாப்பிட்டால் மறுநாள் எனக்கு கொஞ்சம் மலச் சிக்கலை உண்டுபண்ணுகிறது. எனது நண்பர்கள் சிலர் காபி சாப்பிட் டால்தான் மலப்பிரவிர்த்தி உண்டாகிறது இல்லாவிட்டால் இல்லை என்று கண்டிப்பாய் சொல்லுகிறார்கள். ஆகவே இவ்விஷயம் ஒவ்வொரு வருடைய உடற்கூறின் தன்மையை பொறுத்ததாகும். மொத்தத்தில் நான் கூறவேண்டியது என்னவென்றால் சிகிச்சை எப்படியாயினும் இருக் கட்டும், நீண்டகாலம் சுகமாய் வாழவேண்டும் என்று விரும்புபவன் மலச்சிக்கலுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதேயாம். இது சந் தர்ப்பத்தில் மலச்சிக்கலைப் போக்க சிலர் அடிக்கடி எனிமா என்பதை உபயோகித்து வருகிறார்கள். இதை அடிக்கடி உபயோகித்தல் தவறு என்பது என்னுடைய அனுபவமும் அபிப்பிராயமும் ஆகும். இந்த எனிமாவுக்கு ஒருவன் ஆளாகிவிட்டால் அந்த சிகிச்சை இல்லாமல் மலக்கழிவு உண்டாகாது. ஆகவே நாம் உட்கொள்ளும் உணவின் மூலமாகவே இந்த வியாதியை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்பது எனது நிச்சயமான அபிப்பிராயம். கடைசியாக யுனானி வைத்தியர் கள் மலச்சிக்கலைப் போக்க குல்கந்த் என்னும் தித்திப்பு மருந்தை கொடுக்கிறார்கள். இதற்கும் நான் மேற்கூறிய ஆட்சேபனை இருக் கிறது. தினம் குல்கந்தை சாப்பிட்டு வருவதனால் பிறகு நாளா வர்த் தியில் நாம் அதற்கு அடிமையாகப் போவோம். அதில்லாமல் ஒரு நாளைக்கு கூட ‘ வெளிக்கு போக முடியாது.


இனி சிறு நீர் விசர்ஜனத்தைப் பற்றி கொஞ்சம் எழுத விரும்பு கிறேன்:- சாதாரணமாக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்போது நான்குமணி நேரத்திற்கு ஒருதரம் சிறுநீரை வெளிப்படுத்துவது இயற் கையாகும். அப்படி செய்யாது அடக்கி வைப்பது நல்லதல்ல இதைத் தான் இப் பிரிவின் தலைப்பில் 'இரண்டடக்கோம்' என்று தமிழ் வைத் திய நூலில் கூறியதாகும். அவ் விரண்டில் ஒன்று மலம், மற்றொன்று சிறுநீர். இவைகளை வெளிப்படுத்த வேண்டுமென்று மனதில் தோன்றி னால் உடனே அங்ஙனம் செய்வது நல்லதாகும். இதையே பழங்