பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

22

காலத்தில் தமிழ் வைத்தியர் ஒருவர் வேறு விதமாகக் கூறியுள்ளார்.அதாவது இதைச் செய்யலாமா வேண்டாமா என்னும் சந்தேகம் தோன்றினால் உடனே கட்டாயமாய் செய்துதான் தீரவேண்டும் ' என்ப தாம். அப்ப டி கட்டாயமாய் செய்யவேண்டிய கடமை மலஜல விசர் ஜனத்தை பற்றியதாகும். சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைப்பதனால் கீல்வாயு முதலிய சில வியாதிகள் உண்டாகின்றன என்று சில வைத்தியர்கள் கூறுகின்றனர். எதற்கும் ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது சிறு நீரை வைத்தியரிடம் அனுப்பி அதில் ஏதாவது கோளாறு இருக்கிறதா என்று பார்ப்பது நலம். அப்படி இருந்தால் உடனே அதற்கு சுலபமாய் சிகிச்சை செய்துகொள்ளலாம். முக்கிய மாக நம்மவர்களுள் 40 வயதுக்கு மேற்பட்ட அநேகர் மதுமேகம் அல்லது டயபிடிஸ் (Diapetis) என்னும் வியாதிக்கு உள்ளாகி றார்கள் என்பது நாம் அறிந்த விஷயமே. ஆங்கில வைத்தியர்கள் இவ் வியாதியை இரண்டு பிரிவாக பிரித்திருக்கிறார்கள் ஒன்று - டயபிடிஸ் இன்ஸிபிடஸ் (incipidus) மற்றென்று டயபிடிஸ் மில்லிடர்ஸ்’ (Mileteurs) தமிழ் வைத்தியர்கள் முதற் சொன்னதை பஹமூத்திரம் என்று அழைக்கின்றனர். இரண்டாவது பிரிவைத்தான் நம்மவர் மது மேகம் என்று அழைக்கின்றனர். இவ்வியாதி உண்டானால் அது உண் டாவதற்கு காரணமான பல உணவுப் பொருள்களை நாம் நீக்கவேண் டும். அவைகளில் முக்கியமானவை - சர்க்கரை, வெல்லம், கிழங்கு வகைள், வாழைப்பழம், மாம்பழம் முதலிய தித்திப்பு அடங்கிய பழங்களை அகற்றவேண்டும். அதைவிட கேழ்வரகை தினம் உண வாகக் கொள்வது மிக்க குணப்படுத்தும். மேலும் சரியாக தினம் 'வியாயாமம்' எடுத்துக் கொள்வது இந்த வியாதியை தடுப்பதற்கு முக்கிய ஹேதுவாம். இதைப் பற்றி இன்னும் அறிய வேண்டுமென் றால் உங்கள் குடும்ப வைத்தியரை கேட்டு தெரிந்துகொள்ள லாம். ஆரம்பத்திலேயே இவ்வியாதிக்கு சிகிச்சை தேடினால் இவ்வியாதிக்கு ஒருவரும் பயப்படவேண்டியதில்லை - கார் பங்கில் (Carbuncile) என்னும் பிளவை கட்டி வராமல் தடுக்கலாம். பல வருடங்களாக வருடத்திற் கொருமுறையாவது எங் கள் குடும்ப வைத்தியரைக் கொண்டு எனது சிறுநீரில் ஏதாவது கோளாறு இருக்கிறதா என்று பார்த்து வருவது வழக்கம். இந்த முறையை இதை வாசிக்கும் 40 வயதுக்கு மேற்பட்ட எனது நண்பர் கள் கையாண்டுவந்தால் நலமாகும். இச் சந்தர்பத்தில் பிராம்மண