பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

23

 கள் ஆயிரக்கணக்கான வருஷங்களாக ஆண்டு வரும் ஒரு வழக்கத்தை கூற விரும்புகிறேன். அவர்கள் ஒன்றுக்கு போகும் போது ஜலஸ் பர்சம் செய்து கொள்ளுகிறார்கள். இதை நான் விவரித்து கூறுவதற் கில்லை. இந்த வழக்கம் எல்லோரும் பின்பற்றதக்கதாம். இதனால் சில வியாதிகளை தடுக்கக் கூடும். இதை விவரித்தே ஜர்மன் தேசத்து வைத்தியராகிய டாக்டர். கூன் என்பவர் ஒரு புஸ்தகம் எழுதியுள்ளார்; இதற்கு Friction Sitting Bath என்று பெயர் வைத்திருக்கிருர். இதன் மூலமாக சகல வியாதிகளையும் குணப் படுத்தலாம் என்றும் கூறுகிறார்-அது எப்படியாயினும் ஆகுக. இந்த வழக்கம் எல்லோரும் அனுசரிக்கத்தக்க ஓர் வழக்கம் என்பதற்கு ஐயமில்லை.


நித்திரை :

இவ்விஷயத்தில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது பகற் பொழுதில் உறங்கலாகாது என்பதாம். இரவுதான் நமது இயற்கை அன்னை நித்திரைக்கு ஏற்படுத்திய காலம் என்பதற்கு சந்தேகமில்லை. எக்காரணத்தினாலாவது இரவில் விழிக்க வேண்டியிருந்தால் அதற்குபதி லாக மறுநாள் பகலில் கொஞ்சம் தூங்கலாம். மற்றபடி தினமும் பக லில் தூங்கும் வழக்கம் வைத்துக் கொள்ளுதல் தவறாகும். எனக்கு இப்பொழுது சுவாமியின் கிருபையால் 84-வது வயது நடக்கிற போதி லும் நான் பகற்பொழுதில் துங்குவதில்லை. தினமும் சரியாக நித்திரை செய்தல் தேக ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாம். ஒருவன் இருபது அல்லது முப்பது நாட்கள் உணவின்றி ஜீவித்திருக்கலாம். (நமது மகாத்மா காந்தியடிகள் அனுபவம் ஒன்றே இதற்கு சான்றாகும்) ஆனால் ஒருவன் மூன்று நாட்கள் கூட நித்திரையில்லாமல் விழித் திருக்க முடியாது சாதாரணமாக இரண்டு நாள் கூட தூங்காமல் இருப் பதுஅசாத்தியம் ஆகும். பிரான்சு தேசத்து சிறந்த போர் வீரரான நெப் போலியன் என்பவர் ஒரு யுத்தத்தை 48 மணி நேரம் தூங்காமல் குதிரை மீது சவாரி செய்துகொண்டே யுத்தத்தை நடத்தியதாக நான் படித்திருக்கிறேன். இது சாதாரண மனிதர்களால் செய்யக்கூடிய காரியமன்று. ஒரு மனிதன் ஓர் இரவு விழித்திருந்தாலே முகத்தில் விகாரம் காண்கிறது. இரண்டு மூன்று நாட்கள் நாம் இரவில் சரியாக தூங்காவிட்டால் நமது தேகம் சோர்வு அடைகிறது. வைத்தியர்கள் எல்லாம் நோயாளிகளை பரிட்சிக்கும் போது நித்திரை சரியாக வரு கிறதா என்று கேட்பது மிகச் சாதாரணமாகும். பகலெல்லாம்