பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

24

24 உழைத்து இளைத்து போன தேகத்தின் சோர்வை நீக்கி பலம் தருவது நித்திரை ஆகும். பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு 23 மணி நேரம் தூங்குகிறது. அது விழித்திருக்கும் காலம் எல்லாம் பசியில் அழுது பால் குடிப்பதற்கேயாம். மற்ற காலமெல்லாம் அது உறங்குவதால் தான் அதன் தேகம் வளர்கிறது. அதன் தேகம் வளர வளர நித் திரை செய்யும் நேரம் குறைந்து கொண்டே வருகிறது. சாதாரண மாக சுமார் 5 வயது முதல் 12 வயது வரையில் ஒரு பையன் ஏறக்குறைய 10 மணி நேரம் தூங்குகிறன். அதற்குமேல் வாலி பத் தி ல் 8 மணி நேரமாவது தூங்குவது அவசியம் ஆகும்-நடுவயது அடைந்தவர்கள் 6 மணி நேரமாவது சரியாக தினம் தூங்கா விட்டால் ஏதாவது வியாதிக்கு உள்ளாவர்கள் என்று வைத்தியர்கள் கூறுகின்றனர். கடைசியாக என்னைப்போன்ற முதிய வர்களுக்கு 4 மணி நேரம் சரியாக தூங்கினால் அதுவே போதும் என்று ஒரு வைத்தியர் கூறக் கேட்டிருக்கிறேன். இனி தினமும் நித்திரை சரியாக வராவிட்டால் அதை வரவழைப்பது' எப்படி என்று கொஞ்சம் யோசிப்போம். நித்திரை சரியாக வராத வியாதிக்கு இன்சாம்னியா (insommia) என்று பெயராகும். இதை நிவர்த்திப்ப தற்கு ஒரு ஊரில் எத்தனை வைத்தியர்கள் உண்டோ அத்தனை வழிகளை நாம் கேட்கலாம்! இதற்கு வேடிக்கையாக ஒரு கதையை இங்கு எழுதுகிறேன். இது கட்டுக்கதை அல்ல நிஜமான கதை சென்ற நூற்றாண்டில் இங்கிலாந்து தேசத்தில் சில வருடங்கள் முக்கிய மந்திரியாய் இருந்த லார்ட் ரோஸ்பரி ' என்பவர் தனக்கு இன்சாம் னியா எனும் தூக்கமின்மை என்னும் வியாதி தன்னை பீடித்திருப்பதாக கூறி தனக்கு பல வைத்தியர்கள் கூறிய பலவிதமான சிகிச்சைகளால் பயன்படாதது கண்டு இதற்கு யாராவது நிச்சயமான சிகிச்சை தெரிந்திருந்தால் தனக்கு தெரிவிக்கும்படி ஒரு தினசரி பத்திரிகையில் பிரசுரம் செய்தார், உடனே அவரது நண்பர்களிடமிருந்தும், தெரிந் தவர் தெரியாதவர்களிடமிருந்தும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்து குவிந்தனவாம். அவைகளை யெல்லாம் அவர் பரிசோதித்துப் பார்த்து அவைகளில் 289 வெவ்வேறு சிகிச்சைகள் அவருக்கு போதிக்கப்பட்டிருப்பதை கண்டனராம்! இதை நான் முக்கியமாக கூறவந்தது இதற்கு முடிவான சிகிச்சை ஒன்றும் இல்லை, இது அவர்களது உடல் கூறையும் மனப் போக்கையும் பொருத்ததாகும் என்பதேயாகும், நித்திரை வராததற்கு முக்கிய காரணம் மூளையில்