பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

26

 டித்து வருகிறேன். ராமாயணத்தில் ஆதித்ய ஹிருதயம்' என்பதை இரண்டு மூன்று முறை'மனத்திற்குள் ஒப்பித்துக் கொண்டு வருவதாம்; மற்றொரு முறை பிராணயாமம் பண்ணுவதாம்-இந்த பேரைக் கண்டு பயந்துவிடாதீர்கள். இதன் முக்கிய அம்சம் ஒரு நாசித் துவாரத்தை கைவிரலினால் அமுக்கிக்கொண்டு மற்றொரு நாசித் துவார வழியாக மெல்ல சுவாசத்தை உள்ளுக்கிழுத்து கொஞ்ச நேரம் அதை அப் படியே அடக்கி வைத்துக்கொண்டு பிறகு மற்றொரு நாசித் துவாரத்தி னால் மெல்ல மூச்சை விடுவதாகும். இவ்வாறு பத்து பதினைந்து முறை அப்யசிக்குமுன் தூக்கம் வந்து விடுகிறது, இதைப் படிக்கும் எனது நண்பர்கள் நான் மேற்கூறிய பல விதமான மார்க்கங்களில் எதை அனுசரிப்பதின் மூலமாக தூக்கம் வரு கிறதோ அதை அனுசரிப்பார்களாக!

கடைசியாக படுக்கும்போது எப்படி படுத்தல் நலம் என்னும் கேள்விக்கு நான் பதில் கூற வேண்டியவனாகிறேன். மல்லார்ந்து படுத்தல் நல்லதல்ல-அதுவும் கொஞ்சம் அதிகமாய் சாப்பிட்டுவிட்டு மல்லார்ந்து படுத்துக் கொண் டால் கனவில் 'அமுக்கனான் சுவாமிகள்" வருவார்! அதாவது மார்பில் ஏதோ ஒரு பளு உறுத்துவதுபோல் கஷ்டப் படுத்தும் , ஒரு புறம் சாய்ந்து படுப்பதே நல்லது இதற்கு நமது பாட்டிமார் ஒஞ்சரித்து படுத்தல் என்று சொல்வார்கள். அப்படி படுப்பதில் இடது பக்கம் சாய்ந்து படுப்பதா அல்லது வலது பக்கம் சாய்ந்து படுப்பதா என்று என்னை சில நண்பர்கள் கேட்டிருக்கின்றனர். இதற்கு பதில் இது அவரவர்களுடைய செளகர்யத்தை பொறுத்தது" என்று பதிலுரைத்தேன். கடைசியாக நித்திரை செய்யும்போது வாயைத் திறந்து வாயினால் சுவாசித்து உறங்குவது நல்லதல்ல, இந்த வழக்கம் யாருக்காவது இருந்தால் மெல்ல மெல்ல அகற்றவேண்டும். அன்றியும் தூங்கும்போது குறட்டை விடுதல் நல்லதல்ல. அது நமது சுவாச கருவிகளில் ஏதாவது கோளாறு இருந்தால்தான் வரும், வைத் தியரிடம் கூறி தக்க சிகிச்சை தேடுவது நல்லது. ஸ்நானம் அல்லது குளித்தல் : உஷ்ண தேசமாகிய நமது பரத கண்டத்தில் வசிக்கும் ஒவ் வொரு மனிதனும் தினம் ஒரு முறையாவது உடலை நன்றாய் தேய்த்து குளித்தல் மிகவும் அவசியம் என்று நான் நம்மவர்களுக்கு எடுத்து கூறவேண்டியதில்லை. நமது உடலை போர்த்திருக்கும் தோல்வழியாக