பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

27

 வியர்வை மூலமாக சில கழிவுப் பொருள்கள் வெளிப்படுத்தப் படு கின்றன. இதற்கு தினமும் குளிப்பது முக்கியமான மார்க்கமாம். அப்படி குளிக்காவிட்டால் நமது தோலில் உள்ள நுட்பமான துவாரங் கள் அழுக்கினால் அடைக்கப்பட்டு பிறகு ஏதாவது சர்ம வியாதிக்கு இடம் கொடுக்கிறது. கோடை காலத்தில் காலை மாலை இரண்டு வேளைகளிலும் குளிப்பது மிகவும் நல்லது. இவ்வாறு ஸ்நானம் செய்வதில் குளிர்ந்த ஜலத்தில் ஸ்நானம் செய்வதா அல்லது வெந்நீரில் ஸ்நானம் செய்வது நல்லதா என்று என்னை பலர் கேட்டிருக்கின்றனர். இதற்கு பதிலாக என்னுடைய சொந்த அனுபவத்தை இங்கு எழுதுகி றேன். ஏறக்குறைய என்னுடைய 70-வது வயதுவரையில் நான் வெந் நீரிலேயே குளித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் அடிக்கடி எனக்கு ஜலதோஷம் வந்துகொண்டிருக்கும். இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று அசட்டையாய் இருந்துவிட்டேன், 1942-வது வருடம் சென்னையை விட்டு ஜப்பானியர் தடைக்கு அஞ்சி ஆயிரக் கணக்கான பேர்கள் வெளியேறியபோது நானும் என் குடும் பத்துடன் பெங்களூருக்கு போய் சேர்ந்தேன். பெங்களூரோ குளிர்ச்சி பொருந்திய ஊர். என் பழைய சிநேகிதனான ஜலதோஷம் அடிக்கடி என்னை பார்க்க வரலாயிற்று. இதைப்பற்றி என்ன செய்வதென்று என் சம்பந்தியாகிய டாக்டர் அப்பாதுரை முதலியாரிடம் கேட்க அவர் நீங் கள் எந்நேரமும் வெந்நீரிலேயே குளிக்காதீர்கள். அதன் மூலம் உங்கள் உடம்பில் குளிர்ந்த காற்று தாக்கும் போதெல்லாம் இந்த ஜல தோஷத்திற்கு இடங் கொடுக்கிறது. நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குளிர்ந்த ஜலத்தில் குளிக்க ஆரம்பித்தால் இந்த ஜலதோஷம் உங்களை அடிக்கடி பீடிக்காது என்று கூறினார். அவர் வார்த்தையில் நம்பிக்கை வைத்து குளிர்ந்த பூமியாகிய பெங்களூரிலேயே கொஞ்சம் கொஞ்ச மாக பச்சை தண்ணீரில் குளிக்க ஆரம்பித்தேன். அந்த வழக்கத்தை எனது 80 வது வயது வரையில் பழகி வந்தேன். என்னை முன்பு பிடித்த ஜலதோஷம் இப்போது என்ன விட்டு அகன்றது என்றே கூற வேண்டும். 1952 வது வருடம் என் கால்களில் கரப்பான் என்னும் ஒரு சர்ம வியாதி என்ன பிடிக்க ஆரம்பித்தது. அப்போது சென்னை யில் என் குடும்ப வைத்தியரைக் கேட்க அவர் இதற்கு கொஞ்சம் சூடான ஜலத்தையே குளிப்பது நல்லது என்று கூறினர். அதன்படி வெந்நீரில் மறுபடியும் குளிக்க ஆரம்பித்தபோது என் பழைய சினே கிதரான ஜலதோஷம் மறுபடியும் என்னை வந்து பார்க்கலாயினர்.