பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

28

 இதை தடுக்க நான் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த போது லான்செட் (Lancet) என்றும் நான் அநேக வருடங்களுக்கு முன் படித்த ஒரு வைத்திய மாதாந்திர பத்திரிகையில் வெந்நீரில் குளிக் கும்போதெல்லாம் உடனே கொஞ்சம் குளிர்ந்த ஜலத்தால் டூஷ் (Deuche) பண்ணிக் கொள்ள வேண்டும் என்று படித்தது எனக்கு ஞாபகம் வந்தது. அதன் பிறகு நான் வெந்நீரில் ஸ்நானம் பண்ணும் போதெல்லாம் முடிவில் கொஞ்சம் பச்சை ஜலத்தை எடுத்து உடம் பெல்லாம் தடவிக்கொள்ளும் வழக்கத்தை ஆரம்பித்தேன். பிறகு நாளா வர்த்தத்தில் பச்சை ஜலத்தை உடம்பெல்லாம் கொட்டிக்கொள்ள லானேன். இதனால் ஆரம்பத்தில் பயந்த ஒரு கெடுதியும் வரவில்லை. அன்றியும் இப்படி செய்வதினால் எனக்கு கிளர்ச்சியை கொடுத்தது. பழைய சினேகிதர் ஜலதோஷம் வராமலே நின்றுவிட்டார். ஆயினும் இந்த பழக்கத்தை எனது நண்பர்கள் மேற்கொள்ளுமுன் கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். மேற் சொன்னபடி ஆக்ஷன் (Re-action) சரியாய் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதா வது உடலில் ஒரு கிளர்ச்சியும் சூடும் உண்டாகிறதா அல்லது குளிர் எடுக்கிறதா என்று பார்க்க வேண்டும். குளிர் உண்டாவது ஆனால் இந்த வழக்கத்தை உடனே விட்டுவிடவேண்டும். மேற் சொன்னபடி உடலில் ஒரு சூடு உண்டாகி மனக்கிளர்ச்சியை கொடுப்பதானால்தான் இதை அப்யசிக்க வேண்டும்.


இனி அப்யங்கன ஸ்தானத்தை பற்றி கொஞ்சம் எழுதுகிறேன். இது வேறொன்றும் இல்லை நாம் எண்ணெய் தேய்த்து குளித்தல்தான் இதனால் வரும் தேக ஆரோக்யத்தை பற்றி நமது ஆயுர்வேத பண்டிதர் கள் வெகுவாய் கூறியிருக்கின்றனர். அபயங்கனம் ஆயுள் விருத்தி' என்று ஒரு சமஸ்கிருத வைத்திய நூலில் கூறியிருக்கிறது. ஆயினும் மேல்நாட்டு நூல்களையே படித்த நம்மவர்களுள். சிலர் இது அவசிய மில்லை என்று கூறத் தொடங்கியிருக்கிறார்கள். இது தவறாகும். வெப்பம் மிகுந்த நமது பாரத நாட்டில் இந்த எண்ணெய் தேய்த்து குளித்தல் மிக்க அவசியமாம். அப்படி செய்யாவிட்டால் சொறி, சிரங்கு முதலிய பல சர்ம வியாதிகளுக்கு நமது உடல் ஆளாகும். இதன் உண்மையை பரிக்ஷித்து பார்க்க வேண்டு மென்றால் இந்த வழக் கத்தை விட்ட ஒருவருடைய மீப் போர்வையையும் (மேல் தோலையும்) வாரம் வாரம் தேய்த்து குளிக்கும் ஒருவருடைய தோலையும் தடவிப்