பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

30

30 நலம். மேல் நாட்டார் கிரிக்கெட் டென்னிஸ், கால்பந்து முதலிய ஆட்டங்களில் பழகி வருவது இக் காரணம் பற்றியே. இனி இத் தேக பயிற்சியில் என்னுடைய அனுபவத்தை கூறுகிறேன். என் தகப்பனார் என் மூத்த சகோதரர்களுக்கெல்லாம் கசரத் கற்பிக்க ஒரு மகம்மதிய வஸ்தாதியை ஏற்படுத்தி இருந்தார். வாரத்திற்கு இரண்டு மூன்று முறை அவர் என் தமையன் மார்களுக்கு தண்டால், பஸ்கி, ஜோடி, கரேலா, பாணா முதலிய வித்தைகளை கற்பிப்பார் அவர்களு டன் நானும் தண்டால் எடுத்தது ஞாபகம் இருக்கிறது. ஒருவன் தேகப்பயிற்சிக்கு தினம் 50 தண்டால் சரியாக எடுத்தாலே போதும் என்று அந்த வஸ்தாத் சொல்ல கேட்டிருக்கிறேன். பிறகு நான் பச்ச யப்பன் கல்லூரியில் ஆங்கில ஜிம்னாஸ்டிக்ஸ் பழகி வந்தேன். பிறகு பிரெஸி டென்ஸி காலேஜில் சேர்ந்த போது கிரிக்கெட் ஆட ஆரம்பித் தேன். அச் சமயம் எனக்கு ஒருவிதமான காய்ச்சலும் இருமலும் கண்டது. அதற்காக அவ்வமயம் எங்கள் குடும்பவைத்தியராய் இருந்த டாக்டர் வரதப்ப நாயுடு அவர்கள் வியாதியை தீர்க்க மருந்து கொடுத்து என் உடலை தேற்றிய பின் உன் இருதயத்தில் ஒருவித கோளாறு இருக்கிறது ' என்று சொல்லி கிரிகெட் ஆடுவதை நிறுத்தினார். அதன் மேல் நான் டென்னிஸ் ஆட ஆரம்பித்தேன். கொஞ்ச காலம் பொறுத்து என்னை மறுபடியும் பரிசோதித்து பார்த்து அதையும் விடும் படி சொன்னார். கடைசியாக நமக்கு ஏதாவது தேகப் பயிற்சி இருக்க வேண்டுமே யென்று எண்ணி சாயங்காலங்களில் சைக்கிள் மீது சவாரி செய்து வந்தேன். எங்கள் வைத்தியர் இதுவும் கூடாது உனது இரு தய கோளாருக்கு நல்லதல்ல என்று கூறி அதையும் தடுத்து விட்டார். அதன் மீது தேகப்பயிற்சிக்காக நான் என்னதான் செய்யக்கூடும் என்று வருத்தத்துடன் கேட்க அவர் மிஸ்டர் சம்பந்தம் சாயங்காலங் களில் காற்றோட்டமாக கடற்கரை ஓரம் இரண்டு மூன்று மைல்கள் நடந்தால் போதும்" என்று கூறினார். இதை நான் என் தகப்பனாரிடம் சொன்ன போது இது என்னடா இது நடக்கிறதா ஒரு தேகப் பயிற்சி அதைவிட ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கால்களை முன்னும் பின்னுமாக ஆட்டிக் கொண்டிறேன்! " என்று ஏளனம் செய்தார். 1891 வது வருடம் சுகுண விலாச சபை ஆரம்பமான பின் எனது நாடகங்களில் மற்றவர் நடிக்க கற்பிப்பதே போதுமான தேகப்பயிற்சி யாய் இருந்தது. இதற்கும் ஒரு பெரும் தடை நேரிட இருந்தது. அதைப் பற்றி சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன்.