பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

32

 வும் பெயர் பெற்றவன் என்று எல்லோரும் கூறக் கேட்டிருக்கிறேன். அதில் மிகவும் கஷ்டமான காட்சி மனோஹரன் சங்கிலியால் கட்டுண்ட பிறகு அவைகளை அறுத்துக் கொண்டு தன் சொந்த தகப்பனாரையே எதிர்க்க முயலும் காட்சியாம், இப்படிப் பட்ட காட்சியை நான் இது வரையில் 50 முறைக்கு மேல் ஆடியிருக்கிறேன். இச் சமயங்களி லெல்லாம் என்னுடைய ஹிருதய கோளாறு என்னை ஒன்றும் பிடிக்க வில்லை என்றே கூறவேண்டும். இதற்கு காரணம் என்ன ? இதைப் படிக்கும் எனது நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனநிலைக்கு. தக்கபடி இதற்கு பதில் கூறலாம்-என்பதில் என்ன வென்றால். இதற்கு காரணம் நான் வணங்கும் தெய்வத்தின் கருணை என்பதாம். மேற்சொன்ன சங்கதிகளையெல்லாம் விவரமாய் எழுதியதற்கு முக்கிய காரணம் என்ன வென்றால் 1891-ம் வருடம் முதல் 60 வருடங்களாக நாடக மேடையில் நான் பல நூற்றுக் கணக்கான முறை ஆடிய போதி லும் அதனால் என் தேகத்திற்கு ஒரு கெடுதியும் வரவில்லை. ஒரு விதத்தில் எனக்கு நன்மையே பயந்தது என்று கூற வேண்டும்.


இனி நான் கொஞ்சம் முன்பு விட்ட தொடர்ச்சியை எடுத்துக் கொள்கிறேன். 1928-ம் வருடம் நான் நீதிபதி நிலையினின்றும், எனது 55-வது வயதில் விலகிய போது என் தேகஸ்திதியையும் அதற்கு வேண்டிய தேக பயிற்சியையும் பற்றி யோசிக்க வேண்டிய தாயிற்று. அது முதல் இன்னின்ன வேளைகளில் இன்னின்ன வேலைகள் செய்ய வேண்டும் என்று குறித்துக் கொண்டேன். இந்த ஜாபிதாவின் படி காலையில் 20 நிமிஷமும் மாலையில் 20 நிமிஷமும் தேகப்பயிற்சிக் கென்று ஒதுக்கி வைத்திருந்தேன். அன்று முதல் இது வரையிலும் அதன் படியே தேகப் பயிற்சி செய்து வருகிறேன் ; பட்டணத்தை விட்டு நான் வெளியே போக வேண்டி யிருந்தாலும் இந்த வழக்கத்தை விடுவதில்லை. இனி அத் தேகப் பயிற்சி இன்ன தென்று விவரிக் கிறேன். காலையில் எழுந்தவுடன் காலைக் கடனை முடித்த பிறகு என் படுக்கை அறையிலேயே இப் பயிற்சியை செய்து வருகிறேன். இது முக்கியமாக ஸ்விடிஷ் எக்ஸர்ஸைஸ்' என்னும் முறையை பற்றிய தாகும். ஆயினும் இதில் சூரிய நமஸ்காரம் என்னும் நமது நாட்டு பயிற்சியும், மகம்மதியர்கள் செய்யும் ஒருவித தண்டால், பஸ்கியும் கலந்திருக்கிறது. இவைகளை எனக்கென்றே சில மாறுபாடுகளுடன் நிர்ணயித்து கொண்டேன். நான் ஹர்னியா' என்னும் குடல் வத்தா திற்கு உட்பட்டவனா தலால் அதற்கேற்றபடி சில தேக பயிற்சிகளை