பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

35

35 டாக்டர் ஒருவரை காணப் போனபோது என்னையும் தன்னுடன் அழைத்துச் சென்றார் அந்த டாக்டரும், என் பந்துவும் குடிப்பழக்கம் உள்ளவர்கள், ஆகவே அவர்கள் இருவரும் கொஞ்சம் ஒயின் சாப் பிட்டபோது ஒரு கிளாசில் கொஞ்சம் வார்த்து என்னையும் சாப்பிடச் சொன்னார்கள். அதைச் சாப்பிட்டவுடன் என் தலை சுழல ஆரம்பித் தது. உடனே என் பந்துவை எங்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகும்படி வற்புறுத்தி எங்கள் வீட்டுக்கு விரைந்து வந்து கட்டிலின் மெத்தையின்மீது படுத்து மயக்கமாகி உறங்கிவிட்டேன். இரண்டா வது சந்தர்ப்பம் 1895-ம் வருடம் எங்கள் சுகுண விலாச சபை பெங்களூருக்கு போனபோது மிகுந்த குளிரால் என் தொண்டை கட்டிக் கொண்டு நான் பேசவும் கஷ்டமாய் இருப்பதைக் கண்ட வைத்தியர் ஒருவர் கொஞ்சம் பிராந்தி என்ன சாப்பிடச் சொன்னார். அதைச் சாப்பிட்டவுடன் கொஞ்சம் நஞ்சம் பேசக்கூடிய திறமையும் அடியுடன் அற்றுபோயிற்று! இதன் விவரத்தை இன்றும் அறிய வேண்டுமானால் எனது நாடகமேடை அனுபவங்கள் என்னும் புத்த கத்தில் முதல் பாகத்தில் பார்த்துக் கொள்ளலாம்.


மேற்சொன்ன இரண்டு அனுபவங்களினால் புத்தி வந்து ஹிந்து மது விலக்குச் சங்கம் என்னும் ஓர் சபையின் அங்கத்தினன் ஆகி என் உயிர் உள்ளளவும் குடிக்க மாட்டேன் என்று பிரமாணம் செய்துக் கொண்டேன்.

2. புகையிலை :-புகையிலையை சுருட்டாக பிடிப்பது நாம் ஐரோப்பியர்களிடமிருந்து சுமார் 300 வருடங்களுக்கு முன்பாக கற்றுக் கொண்ட ஒரு கெட்ட வழக்கமாகும். காரணப் பெயராகிய புகையிலை என்பதே அமெரிக்கா கண்டத்திலிருந்து ஐரோப்பா கண்டத் திற்கு வந்து பிறகு இந்நாட்டிற்கு வந்த பொருளாகும். இது சுருட் டாகவும், சிகரெட்டாகவும், ஹுக்காவின் மருந்தாகவும், நமது நாட்டில் விரைவாக பரவலாயிற்று. இதனால் எனக்கு தெரிந்தவரையில் தேக செளக்கியத்திற்கு ஒரு பயனும் இல்லை. சுருட்டு, சிகரெட்டு முதலிய வைகளை பிடிப்பதனால் இருதயத்திற்கும், நுரையீரலுக்கும் ஹானி உண்டாகிறது என்பது பல வைத்தியர்களுடைய அபிப்ராயம், அன் றியும் இப்புகையிலையை சும்மா ஆகவோ அல்லது வெற்றிலை பாக் குடன் ஆகவோ வாயில் போட்டு மெல்லுவது தென்னாட்டில் முக்கிய மாக மலையாள தேசத்தில் அதிகம் பரவி இருக்கிறது. இந்தப் புகை