பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

37

 கூறுகின்றன. இப்படி வெற்றிலை போட்டுக் கொள்வதினால் நாம் உண்ட உணவு சீக்கிரம் ஜீரணமாகிறது. அன்றியும் நமது உணவில் குறைவாய் இருக்கின்ற கால்சியம் (colcium) சத்து வெற்றிலையோடு நாம் சேர்க்கும் சுண்ணூம்பினால் பூர்த்தியாகப்படுகிறது. மேலும் வாயில் சில சமயங்களில் உண்டாகும் துர் நாற்றத்தை இந்த வழக்கம் நீக்குகிறது. ஆகவே இந்த வழக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் உபயோகமானதாம். இதில் என்னுடைய அனுபவத்தை கூறுகிறேன் என் மனைவி உயிருடன் இருந்தவரையில் இந்த வழக்கத்தைக் கைப் பற்றி வந்தேன். பிறகு வானப்பிரஸ்த ஆஸ்ரமத்தின் முறையை மேற்கொண்டபின் இந்த வழக்கத்தை விடவேண்டியதாயிற்று. 1950வது வருடம் நான் குடிசர சன்யாசம் வாங்கிக்கொண்டபின் இந்த வழக்கத்தை முற்றிலும் மறக்கலானேன். இதில் ஒரு எச்சரிக்கை வெற்றிலை பாக்குடன் புகையிலையை சேர்த்து போட்டுக் கொள்ளுதல் மிகவும் தவறாகும். இதை முன்பே நான் கண்டித்திருக்கிறேன்: அன்றியும் வெற்றிலை பாக்கு ஒரு நாளைக்கு 3 முறை போட்டுக் கொள்ளுதல் நல்லது. எந்நேரமும் அதே போட்டுக்கொண்டு ஆடானது தழையை மெல்லுவது போல் எப்போதும் மென்றுக் கொண்டிருத்தல் நல்லதல்ல. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும் எந்த வழக்கத்திலும். தாம்பூலத்தில் பாக்கை உபயோகித்த போது அந்த பாக்கை சிறு துண்டுகளாக வெட்டி இளநீரில் ஊற வைத்து உலர்ந்த பின்பு உபயோகித்தால் நலம். தாம்பூலத்தின் வெற்றிலையை எவ்வளவு இளசாக இருக்கிறதோ அவ்வளவும் நல்லது. இதனை ரவேஸ் வெற்றிலை என்பார்கள்.


சம்போகம் :-அறிவுடையோர்கள் நால்வர் கூடி பேசும்போது இதைப்பற்றி பேசுவது மரபல்ல. ஆயினும் நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தைப் பற்றி ஆராயுங்கால் இதை ஒரு முக்கியமான விஷய மாக கருதி வெளிப்படையாய் எழுதித்தான் தீரவேண்டும்.


நமது முன்னோர்கள் நான்கு ஆஸ்ரமங்களாக ஒருவர் ஆயுளை வகுத்திருக்கின்றனர். முதலாவது பிரம்மசரியம். இதை சாதாரண மாக ஒருவன் 21 வயது வரையில் அநுஷ்டிப்பது ஒழுங்காகும். இந்த ஆஸ்ரமத்தில் இருக்கும்போது ஒருவன் சம்போகத்தை கனவிலும் நினைத்தல் ஆகாது. இரண்டாவது ஆஸ்ரமம் இல்லறமாம். இதில் இருக்கும்போது சம்போகம் செய்தல் ஒருவன் கடமையாகும். இதைப்